திருப்பூர், செப்.29 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் படு கொலை செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாளருக்கு நீதி கேட்டு அக்டோ பர் 3 ஆம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி போராட் டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங் கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன் னணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் கூட்டம் ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் வியாழனன்று நடை பெற்றது. ஏஐடியுசி மாவட்ட பொதுச்செய லாளர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு பாலன், எல்பிஎப் ரங்கசாமி, அறிவழகன், மகேஷ்கு மார், ஏஐடியுசி சேகர், மோகன், ஜெகநாதன், ஐஎன்டியுசி சிவசாமி, எச்எம்எஸ் முத்துசாமி, எம்எல்எப் சம்பத், மனோகரன் மற்றும் ஐக் கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒரு கினைப்பாளர் ஆர்.குமார், எஐகேஎஸ் மாவட் டச் செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், ஆகஸ்ட் 24 தேதி டெல்லி தல்கோதரா மைதானத்தில் நடைபெற்ற எஸ்கேஎம் மற் றும் தொழிற் சங்கங்களின் கூட்டு மாநாட்டின் முடிவுகளின்படி, உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர்கேரியில் நடந்த விவசாயிகள் மற் றும் பத்திரிகையாளர் படுகொலைக்கு நீதி கேட்டு, இரண்டாம் ஆண்டு நினைவு நாளான அக்டோபர் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தொழிலா ளர்கள் மற்றும் விவசாயிகள் கருப்பு பேட்ச் அணிந்து திரளாக பங்கேற்க செய்வது என வும் முடிவு செய்யப்பட்டது.