districts

img

எம்எல்ஏ க.செல்வராஜ் திடீர் ஆய்வு தூய்மையான நொய்யல் தரைப்பாலம்

திருப்பூர், செப். 3 - திருப்பூர் தெற்கு எம்எல்.ஏ., க.செல்வ ராஜ் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற் கொண்டதைத் தொடர்ந்து திருப்பூர் நொய் யல் தரைப் பாலம் உடனடியாக தூய்மைப்ப டுத்தப்பட்டது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில்  இருந்து யூனியன் மில் ரோடு செல்வதற்கு நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்  பாலம் உள்ளது. கடந்த சில நாட்களாக பரு வமழை பெய்து வரும் நிலையில் நொய்யல்  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.  இதனால் இந்த தரைப்பாலத்தை தொட்டுக்  கொண்டு தண்ணீர் சென்றது. அப்போது குப் பைகள், கழிவுகள் இந்த பாலத்தில் தேங்கி  நின்றது. எனினும் இந்த குப்பைகள் நீண்ட நாட் களாக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இப்பாதை யில் சென்ற திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல் வராஜ் திடீரென அந்த தரைப்பாலத்தில் இறங்கி ஆய்வு செய்தார்.அத்துடன் மாநக ராட்சி அதிகாரிகளை அழைத்து, நொய்யல்  தரைப்பாலத்தில் தேங்கியிருக்கும் குப்பை களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்  என உத்தரவிட்டார். இதையடுத்து உடனடி யாக தூய்மைப் பணியாளர்கள் வரவழைக் கப்பட்டு இந்த பாலத்தில் தேங்கியிருந்த குப் பைகள் அகற்றப்பட்டன.இதனால் நொய் யல் தரைப் பாலம் பல நாட்களுக்குப் பிறகு  தூய்மையாகக் காட்சியளித்தது.

;