districts

img

பணிநேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக்கிடுக

கோவை, செப்.5– தமிழக அரசின் சாதனைக்கு மகுடம் சூட் டும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்க வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத் துவத் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற முறையில் தமிழக முழுவதும் சுமார் 11,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத் திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற அதேநேரத்தில் இதில் பணியாற் றும் தன்னார்வல ஊழியர்கள் சட்டப்படியான உரிமைகள் பெறாமல் தவித்து வருகின்றனர்.  மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை  தமிழக அரசு அங்கீகரித்து, காலத்துக்கேற்ப  ஊதிய உயர்வை வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர  ஊழியராக்க வேண்டும். தீபாவளி பண்டிகை  கால செலவிற்கு ஒரு மாத ஊதியத்தை  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் கே.ரத்தினகுமார் உள் ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில் ஏராளமான  பெண் ஊழியர்கள் பங்கேற்ற னர்.  ஈரோடு இதேபோன்று  இதே கோரிக்கைகளை  வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மக்களைத் தேடி மருத் துவ ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.ரேவதி, செயலாளர் கே.தனலட்சுமி ஆகி யோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். இதில் திரளான ஊழியர் கள் சீருடையுடன் கலந்து கொண்டனர். சிஜ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் உடனிருந்தார்.

;