districts

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை – நீலகிரிக்குள் நுழையும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்

கூடலுார், டிச.5-  ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, நீலகிரிக்குள் நுழையும் பயணிகளுக்கு மாநில எல்லைகளில் மருத்துவ துறையினர் பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளனர். ஒமைக்ரான் எதிரொலியால், தமிழகத்தில் மருத்துவ துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்டத்தில், கர்நா டகா எல்லையான கக்கநல்லா சாவடி, கேரள எல்லை யான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்ட வயல் சோதனை சாவடிகளில், மருத்துவர்கள் தலைமையி லான மருத்துவ குழுவினர் பரிசோதனையை துவக்கி யுள்ளனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று உள்ளிட்டவைகளை கட்டாய சோதனை செய்து பின் மாவட்டத்திற்குள் அனுமதித்து வரு கின்றனர்.  இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், இவ் வழியாக நீலகிரிக்கு வரும் வெளி மாநில பயணியர்கள் பரி சோதனைக்கு பின் அனுமதிக்கிறோம். உடல் வெப்பம் அதிகமாக இருந்தாலோ, தடுப்பூசி சான்றுகள் இல்லை என்றாலோ அனுமதிப்பதில்லை. மேலும், வெளி மாநி லம் சென்று வரும் உள்ளூர் மக்களுக்கு தொற்று பரி சோதனைக்கான மாதிரிகள் எடுக்கவும் வசதி செய்யப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.

;