districts

img

பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோவை, ஆக. 24- பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் கவனம்  செலுத்த வேண்டும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண் டியதும் அவசியம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கே.கார்த்திகேயன் தெரிவித்தார். கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும்  ஆர்த்தோ ஒன் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிக் கையாளர்களுக்கான எலும்பு அடர்த்தி மற்றும் பிசியோ தெரப்பி பயிற்சி முகாம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களுக்கு இரத்தம் அழுத்தம், எலும்பு அடர்த்தி உள்ளிட்ட பரிசோ தனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த எலும்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து  ஆலோசனைகள் வழங்கினர்.  அதனை தொடர்ந்து பிசியோ தெரபி பயிற்சியும் வழங்கப்பட்டது. கோயமுத்தூர் பத்திரிக் கையாளர் மன்றத் தலைவர் ஆ.ர.பாபு தலைமையில் நடை பெற்ற  முகாமில், பொருளாளர் மாரியப்பன் முன்னிலை  வகித்தார். இதில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு, முகாமை பார்வை யிட்டு பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார். துணைத் தலைவர்கள் தென்னிலவன், ஐஸ்வரியா காவல் கண்காணிப் பாளருக்கு நினைவு பரிசு வழங்கினர். மருத்துவ குழுவின ருக்கு காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசு வழங்கி னார்.  தொடர்ந்து எலும்பு சிகிச்சை மருத்துவர் மணிகண்டன்  முதுகு தண்டு செயல்பாடுகள், பாதிப்பு ஏற்படும் படிநிலை கள், மற்றும் மாற்றங்கள் குறித்தும், எந்த மாதிரியான சிகிச்சை கள் உள்ளது, உடல் பயிற்சியின் அவசியம் குறித்து விளக்க மளித்தார்.  நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் கூறும் போது, உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும், உடல்நலத்தை பணத்தால் பெற முடியாது,  உடலில் ஏற்படும் சிறிய மாற்றமும் பெரிய பாதிப்பை ஏற்படுத் தும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.  பத்திரிக்கை யாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வது, கேமரா, போன்ற  கருவிகளுடன் பணியாற்றுகின்றனர் இது முதுதண்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.  காலை அல்லது மாலை நேரங்க ளில் உடற்பயிற்சிகள் செய்து கொள்ள வேண்டும் என்றார்.