திருப்பூர், அக். 18 - வீடில்லாத ஏழை மக்களுக்கு இல வச வீட்டுமனைப் பட்டா கேட்டு ஊத்துக் குளியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி நில வருவாய் ஆய் வாளர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத் தின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார் பில் செவ்வாயன்று இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 225 பெண்கள் பங் கேற்றனர். 218 மனுக்கள் கொடுக்கப் பட்டது. இந்த போராட்டத்திற்கு தாலுகா துணைத்தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மாவட்ட செயலாளர் கு. சரஸ்வதி சிறப்புரை ஆற்றினார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த போராட்டத்தில் மாதர் சங்க கமிட்டி உறுப்பினர்கள் லட்சுமி, மீனாட்சி, அம்புஜம் மற்றும் சிஐடியு பொது தொழிலாளர் சங்க செயலாளர் வி.கே.பழனிசாமி, பனியன் சங்க ஏரியா செயலாளர் சேட் என்கிற சுப்பிர மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்ட னர். இந்த காத்திருப்பு போராட்டத்தை யொட்டி ஊத்துக்குளி வட்டாட்சியர் சைலஜா, ஊத்துக்குளி காவல் ஆய்வா ளர் கவிதா, ஊத்துக்குளி ஊராட்சி ஒன் றிய திருமண மண்டபத்தில் வைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி, ஊத்துக் குளி தாலுகாவில் மாதர் சங்கம் சுட்டிக் காட்டிய இடங்களில் புறம்போக்கு இடங்கள் பட்டா வழங்க தகுதியுள்ள நிலமா? என ஆய்வு செய்து கூடிய விரைவில் பட்டா கிடைக்க ஏற்பாடு செய் கிறோம் என்று உறுதி அளித்தனர். அத்துடன் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டவர்கள் விபரம் தெரிவித் தால் மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் நிறைவு பெற்றது.