கோவை, நவ.23– குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 42 மற்றும் 27 ஆவது வார்டுகள் ஏற்கனவே சின்னவேடம் பட்டி பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளாக இருந் தது. இதனை கோவை மாநகராட்சியுடன் இணைத்த பிறகு கடந்த பத்தாண்டு காலத் தில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறை வேற்றப்படவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை யும் அளித்து வருகின்றனர். ஆனால், அதி காரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியே வந்த நிலையில், 42 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி களில் மழை நீர் வடிகால் வசதிகளை செய்து தர வேண்டும்.
குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண் டும். சாலை வசதி செய்து தரப்பட வேண்டும். கோவை நாடாளுமன்ற உறுப்பி னரின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் 42, 27 ஆவது வார்டு கிளைகள் சார்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.குளம் ஒன் றிய மேற்கு பகுதி குழு செயலாளர் எம்.சண் முகசுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், ரமேஷ், பாலு, கிளைச் செய லாளர்கள் சி.ஆர்.வெள்ளிங்கிரி, எம்.வெள் ளிங்கிரி, கோவிந்தன்குட்டி, கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தையடுத்து குடிநீர் வாரிய அதிகாரி வெங்கட்ராமன், மாநகராட்சி அதிகாரி சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகத்தை முறைப் படுத்தி தருவதாகவும், இதர கோரிக்கை கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்து தருவ தாகவும் உறுதியளித்தனர்.