districts

பட்டியலின சிறுமிகள் மீது கும்பல் பாலியல் வன்கொடுமை: குற்றங்களை தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், மே 16 - உடுமலை பட்டியிலின சிறுமி கள் மீதான பாலியல் வன்முறை வழக் கில் உரிய மேல் நடவடிக்கை எடுக்க வும், இதுபோன்ற குற்ற சம்பவங் கள் நடைபெறாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், திருப்பூர் மாவட்ட ஆட் சியர் த.கிறிஸ்துராஜை சந்தித்து  அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: உடுமலையில் இரண்டு பட்டி யிலின சிறுமிகள் மீது 9 பேர் பாலி யல் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்ட குற் றத்திற்கு காவல் துறையால் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத் தின் உடனடி தலையீடு காரணமாக  வேகமாக குற்றவாளிகள் மீது  போக்சோ பிரிவின் கீழ் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்து டன் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியி லின சிறுமிகளாக உள்ளதால்  எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழும் கூடுத லாக வழக்குகள் பதியப்பட்டுள் ளன. அந்த சட்டப்பிரிவின்படி பாதிக் கப்பட்டவர்களுக்கு வழங்க வேண் டிய நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இது  போன்று வழக்குகள் வந்த வண் ணம் உள்ளன. கடந்த ஒரிரு மாதங்க ளுக்கு முன்பு தாராபுரத்தில் ஒரு  பட்டியிலின சிறுமி பாலியல் வல் லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மருத் துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச் சைக்கு பின் குற்றவாளி குறித்த தகவல்கள் வெளியாகின. தற் போது உடுமலையில் இரண்டு சிறு மிகள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளிவந்திருக்கும் சமயம், காங்க யத்தில் இதே போன்று ஒரு சம்ப வம் நடைபெற்ற தகவல் வெளியாகி யுள்ளது. அனைத்தும் மருத்துவம னையில் இருந்து தகவல் சொல்லப் பட்டு பின் குற்றவாளிகள் மீது நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது. உள்ளூர் காவல் நிலையங்க ளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் மீது காவல்துறை உடனுக்கு டன் உரிய நடவடிக்கை மேற்கொள் வதை மாவட்ட நிர்வாகம் உறுதி  செய்ய வேண்டும். இந்த சம்பவங்க ளில் ஈடுபடும் குற்றவாளிகள் அனை வரும் போதை பொருட்களை பயன் படுத்தியுள்ளது, பத்திரிக்கை செய் திகள் மூலம் அறியப்படுகிறது.  குற்றவாளிகள் சட்டத்தின் பிடி யில் இருந்து தப்பி செல்லாதவாறு  காவல்துறை மற்றும் அரசு தரப்பு  உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் குழந்தைகள் உரிய தகவல்களை சொல்வதற்கு உதவி மைய எண்களை கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்துவதை உறுதி  செய்ய வேண்டும். போக்சோ சட்ட  பிரிவில் பெண் குழந்தைகள் பாது காப்பு குறித்து சொல்லப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டும் நெறிமுறை களையும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவ னங்கள், பொதுமக்கள் கூடும் மையங்களில் நிரந்தரமாக இருக் கும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும். வருவாய், உள்ளாட்சி, காவல்  துறை நிர்வாகங்களை முழுமை யாக இதற்கு பயன்படுத்த வேண் டும். வாய்ப்புள்ள தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட் சியர், மாவட்ட காவல் கண்காணிப் பாளர், மாவட்ட முதன்மை நீதிபதி,  காவல் ஆணையர் உள்பட கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குற்ற செயல்களை தடுக்க உதவிடும். இதுவரை மாவட்ட அளவில் போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை  மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். பாதிக் கப்பட்ட பெண் குழந்தைகளை போக்சோ சட்டத்தின் படி விசாரிக் கும் அதிகாரிகள் உரிய வழிகாட்டு தல் படி செயல்படுவதை உறுதி  செய்ய வேண்டும். சீருடை அல் லாத உடையில் சென்று குழந்தை களிடம் விசாரணை மேற்கொள் வது, காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லாமல் குழந்தை கள் நல மையத்தில் வைத்து விசா ரிப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.  உளவியல் ரீதியாக மனநல  சிகிச்சை அளிப்பதை உடனடியாக  மேற்கொள்ள வேண்டும். மேற் படி உடுமலை சம்பவத்தில் பாதிக் கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத் தினை கருத்தில் கொண்டு அவர்க ளின் படிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகளையும், அதற் கான நிதியை அரசிடம் பெற்று வழங் குவதையும் உறுதி செய்ய வேண் டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கஞ்சா உட்பட போதை வஸ் துகள் அவ்வப்போது காவல் துறை யால் கைப்பற்றப்படுவதாக நாளி தழ்களில் வந்த வண்ணம் உள்ளது.  முழுமையாக இதனை தடை செய்ய  உரிய நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும். இத் தகைய நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில்  இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தலாம்  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.