districts

img

மெட்ராஸ் ரெஜிமென்ட் உதய தினம்

உதகை, டிச.5- குன்னூரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 264 ஆவது உதய தினம் கொண்டாடப்பட்டது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1758 ஆம்  ஆண்டு டிச.4 ஆம் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உரு வாக்கப்பட்டது. இதன்பின் மதுக்கரையில் மெட்ராஸ் ரெஜி மெண்ட் மையம் உருவாக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு குன் னூர் வெலிங்டனில் உள்ள ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ்-க்கு மாற்றப் பட்டது. இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலான புகழ் பெற்ற வரலாற்றை கொண்டுள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 264 ஆவது உதய தினம் நீலகிரியில் கொண்டா டப்பட்டது. இதில், பல்வேறு போர்களில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ், ராணுவ மூத்த அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இதில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தி னர். அப்போது ஸ்ரீநாகேஷ் பேரக்ஸில் சைனிக் சம்மேளனம், முன்னாள் படைவீரர்கள், தற்போது பணியில் இருக்கும் படை  அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது அனு பவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.