districts

img

நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகள்: கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பாதிப்பு

திருப்பூர், மே 31-  திருப்பூர் மாவட்டத்தில் கடந்த  இரு மாதங்களில் மட்டும் தெருநாய் கள் கடித்ததில் 20க்கு மேற்பட்ட ஆடு கள் கொல்லப்பட்டுள்ளது. 10க்கும்  மேற்பட்ட ஆடுகளுக்கு பலத்த  காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற  சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறு வதால் கால்நடை வளர்ப்பை நம்பி  வாழும் விவசாயிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுகிறது.  திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் அருகே காங்கேயம் சாலை ஓலப்பாளையம், கல்லாங் காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் (50). விவசாயி யான இவர் செம்மறி ஆடுகளை  வளர்த்து வருகிறார். வியாழக்கி ழமை வீட்டுக்கு அருகில் உள்ள விளைநிலத்தில் ஆடுகளை மேய்ச் சலுக்கு விட்டுள்ளார். அப்போது, 3  தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள்  உயிரிழந்தன.  ஏப்ரல் மாதம் பொன்னிவாடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (40). ஆட்டுப் பட்டியில் 20 செம் மறி ஆடுகள் இருந்துள்ளன. தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் ரூ.75  ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள்  பலியாகின. 5 ஆடுகளுக்கு பலத்த  காயம் ஏற்பட்டது. பல்லடம் ஜே.கே. ஜே.காலனியைச் சேர்ந்த கமலா (60) என்பவருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் கொல்லப்பட்டன. அதேபோல காங்கேயம் அரு கேயுள்ள முள்ளிப்புரம் பகுதி பால சுப்பிரமணி (60). பட்டி அமைத்து 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இரவு நேரத் தில் பட்டியில் அடைக்கப்பட்ட இந்த  ஆடுகளை தெருநாய்கள் கடித்த தில் 6 ஆடுகள் உயிரிழந்தன. 4 ஆடு கள் காயமடைந்தன. பதிவு செய்யப் பட்டவை மட்டும் தான் இவை, பதிவு  செய்யப்படாமல் பல சம்பவங்கள்  நடந்து வருகிறது என விவசாயிகள்  கூறுகின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறுகையில், மாவட் டம் முழுவதும் ஊத்துக்குளி, பல்ல டம், பெருமாநல்லூர், உடுமலை, காங்கேயம் உட்பட சுற்றுவட்டார பகுதியில் நாய் கடித்து ஆடுகள்  பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. இறைச்சி கழிவுகளை மேலாண்மை செய்ய திட்டமேதும் இல்லாததால் இறைச்சிக் கழிவு களை வியாபாரிகள் தெரு ஓரங்க ளில் வீசி செல்கின்றனர். இந்த இறைச்சிகளை நாய்கள் தின்று பழகி விடுகின்றன. இதைத் தொடர்ந்து விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளையும் கடித் துக் குதறுகின்றன. ஆடுகளை நாய் கள் கடித்து விட்டால் உடனடியாக விவசாயிகள் கிராம நிர்வாக அலு வலருக்கும், கால்நடை மருத்துவ ருக்கும் தகவல் அளிக்கின்றனர். இறந்த ஆடுகள் உடல் கூர்ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டு விடு கிறது. பேரூராட்சி, கிராம ஊராட்சி பகு திகளில் தெரு நாய்களை ஒழுங்கு படுத்த போதுமான ஏற்பாடு இல்லை. மாநகராட்சி பகுதிகளில்  தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏற்பாடு உள்ளது.  மேலும், தன் னார்வ தொண்டு நிறுவனங்களும் நகரப் பகுதிகளில் மட்டுமே கவனம்  செலுத்துகின்றனர். இடி, மழையால் ஆடுகள் உயிரி ழந்தால் அரசு நிவாரணம் வழங்கு கிறது. இதுபோல் நாய் கடித்து  இறக்கும் ஆடுகளுக்கு எந்த நிவார ணமும் இல்லை. கால்நடைகளைக்  கடித்து கொன்றுவரும் வெறிநாய் களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாய் கடித்து பலியாகும் கால்நடைகளுக்கு வரு வாய்த் துறை மூலம் நிவாரணம் வழங்கினால் மட்டுமே விவசாயி களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றார்.

;