districts

img

புரியாத மொழியில் சட்டத்தின் பெயர் வைப்பதா?

திருப்பூர், செப். 1 -  குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய  சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்  சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியி லும் மாற்றம் செய்த சட்ட மசோதாவை ஒன் றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பூ ரில் வழக்கறிஞர்கள் வியாழனன்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் முன்பு, திருப்பூர் மாவட்ட  வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பழனிச் சாமி தலைமையில் இப்போராட்டம் நடந் தது. திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரகுபதி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுமன் (எ) சுந்தரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத் தையும், இந்திய சாட்சிய சட்டம் மற்றும்  இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில்  மாற்றம் செய்து சட்ட மசோதாவை தாக்கல்  செய்துள்ள மத்திய அரசை கண்டித்து, ஒன் றிய அரசு சட்டத்தை திருத்தம் செய்வதை கண் டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி னர். இந்த உண்ணாவிரதத்தில் வழக்கறிஞர் கள் பலர் பங்கேற்றனர்.