districts

img

கனமழையால் மண்சரிவு: ஏற்காடுக்கு போக்குவரத்து தடை

சேலம், செப்.6- ஏற்காடு செல்லும் மலைச் சாலையில் கனமழையின் காரண மாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இத னால் இச்சாலையில் வாகனங்கள் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உத்தர விட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காட்டில்  கனமழை பெய்து வருகிறது. குறிப் பாக 60 அடி பாலம் பகுதியில்  பெரிய மண்சரிவு ஏற்பட்டதன்  காரணமாக வாகனப் போக்கு வரத்து தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை யினர் ஒருங்கிணைந்து ஜேசிபி  இயந்திரம் மற்றும் கம்ப்ரசர் இயந்தி ரங்களைக் கொண்டு சீரமைப்புப்  பணிகளில் ஈடுபட்டு வருகின்ற னர். பல இடங்களில் அடைப்பு ஏற் பட்டு சாலையில் தண்ணீர் வடிந்து  செல்கிறது. விரைவில் சாலையில்  ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மற்றும்  சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.  இந்நிலையில், ஏற்காடு மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள  இடங்களில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கனமழை பெய்யும் எச்சரிக்கை இருப்பதால் ஏற்காடு சாலையில் பாறைகள் உருண்டு வந்து மண்சரிவு ஏற்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதி யில் தற்காலிகமாக போக்கு வரத்து நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உத்தர விட்டுள்ளார்.

எனவே, ஏற்காடு செல்பவர்கள் பிரதான சாலையை பயன்படுத்துவதைத் தவிர்த்து, குப்பனூர் சாலையினை பயன் படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கர்நாடகா மாநிலத்தில்  தொடர்ந்து கனமழை பெய்து வரு வதால், மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில்  சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம்  கனஅடி நீர் வரவு அறியப்பட்டுள் ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில் உள்ள காவிரிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப் பாக இருக்க வேண்டும். வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறையினர் ஒருங்கினணந்து, தாழ்வான பகுதி களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங் கியுள்ளது. காவிரி ஆற்றில் உபரிநீர் அதி களவில் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் நீரை பார்க்கும் ஆர்வத்தில் ஆற்றில் இறங்கவோ, அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாது. மேலும், குழந் தைகள் மற்றும் முதியவர்கள் ஆற் றின் அருகில் செல்வதைத் முற்றி லும் தவிர்க்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;