பொள்ளாச்சி, நவ.27- மருத்துவம் பயில கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் கட்ட வசதியில்லாததால் பொள் ளாச்சியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் சமையல் வேலைக்கு செல்லும் அவலம் ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி யைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யான முருகன், சுனிதா ஆகியோ ரின் இரண்டாவது மகன் எம்.யுவன் ராஜ் (18). இவர் அப்பகுதியிலுள்ள சமத்தூர் வானவராயர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2019-20 கல்வி யாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பொதுதேர்வின் போது தந்தை முருகன் தீடீரென மரணமடைந்த நிலையில், பொதுத் தேர்வில் 600க்கு 445 மதிப்பெண் கள் பெற்றார்.
இதேபோல் நீட் தேர் விலும் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, மருத் துவ படிப்பிற்கான கலந்தாய்வில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட் டத்தில் உள்ள மூன்று தனியார் மருத் துவ கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பு கிடைத்தது. ஆனால், குடும்ப வறுமையினால் ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் செலுத்தி படிக்க முடியாத நிலையில் மருத்துவ கனவை கைவிட்டு வீடு திரும்பி னார். தற்போது, சமையல் பணிக ளுக்கு உதவியாளராக சென்று வரு கிறார்.
இந்நிலையில், திமுக, மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி களின் அழுத்தத்தால் தனியார் மருத் துவ கல்லூரியில் இணைந்த அரசுப் பள்ளி மாணவர்களின் அனைத்து கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பினால் அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் பயனடையவுள்ள போதிலும், கலந் தாய்வு முடிந்து காலதாமதமாக இந்த அறிவிப்பு வந்ததன் காரண மாக எம்.யுவன்ராஜ் போன்று கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்யாமல் திரும்பிய மாணவர் கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவன் யுவன்ராஜ் கூறுகையில்; தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயின்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட் டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து, கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவப் படிப்பை கைவிட்ட ஏழை மாண வர்களுக்கு மீண்டும் மருத்துவ கல் லூரியில் இடம் கிடைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி முழுக்கட்டணத் தையும் அரசு செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.