districts

img

காடு என்ற ஒன்று இல்லை என்றால் மனிதகுலம் இல்லை

உதகை, மே 18- காடு என்ற ஒன்று இல்லை என் றால் மனிதகுலம் இல்லை, எதிர்கால தலைமுறையை பாதுகாக்க வனத்தை பாதுகாப்போம் என உதகையில்  நடைபெற்ற வன சட்டங்கள்  குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற  சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி சதீஷ்குமார் பேசினார். நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வனத்துறை சார்பில் வன சட்டங்கள் குறித்த கருத் தரங்கம் உதகையில் உள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூட்ட  அரங்கில் நடைபெற்றது. இக்கருத்த ரங்த்திற்கு சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் முகமது அன்சாரி வர வேற்று பேசினார். மாவட்ட நீதிபதி  அப்துல் காதர் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சதீஷ்குமார் பங்கேற்று கருத்த ரங்கை துவக்கி வைத்து பேசுகை யில், வன பாதுகாப்பு சட்டம் குறித்து  ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். வன குற்றங்களில் ஈடுப டுபவர்களை வெறுமனே கைது செய்யப்படுவதால் எவ்வித பிர யோஜனமும் கிடையாது. உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண் டும். முறையான விசாரணை நடத்தப் படவில்லை என்றால் சட்டத்தின் முன்பு வழக்கு நிற்காது. அது வனம்  சார்ந்த குற்றம் மட்டுமின்றி காவல் துறை, சிபிஐ, ஈடி உள்ளிட்ட எந்த அமைப்பிற்கும் பொருந்தும்.  வன குற்றம் தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது, சட்டத்தை முறையாக பயன்படுத்தி உள்ளோமா என்பதை பார்க்க வேண்டும். இதற்கு வனத்துறை அதிகாரிகள், வன சட் டம் குறித்து முழுமையாக அறிந்து  வைத்திருக்க வேண்டும். தண்ட னைக்குரிய குற்றம் எது, அபராதம் மட்டும் விதிக்கக்கூடிய குற்றம் எது  என்பதையும் தெரிந்து கொள்ள  வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டு  சட்டத்திற்கு உட்பட்டு வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாத் தால் தான் எதிர்கால தலைமுறையி னர் நன்றாக இருக்க முடியும். காடு என்ற ஒன்று இல்லை என்றால் மனி தகுலம் இல்லை. தேனீக்கள் ஒட்டு மொத்தமாக உலகில் இருந்து அழிந்து விட்டால் இரு ஆண்டுக ளில் மனிதகுலம் அழிவு நிலைக்கு சென்று விடும். உணவு சங்கிலியில் உள்ள ஒரு உயிரினம் அழிந்தால் மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்ப டுத்தும். எனவே வனத்துறை அதிகாரி கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.  வன சட்டம் குறித்து அறிந்து கொள்வதுடன், சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நாம் தற்போது அனைத் தையும் கட்டுபடுத்தும் டிஜிட்டல் உல கில் இருக்கிறோம். தற்போது மின் னணு சார்ந்த ஆதாரம் இல்லை என் றால் எதுவும் இல்லை. செல்போன் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனை எப்படி ஆதாரமாக சமர் பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். இக்கருத்தரங்கில் நீலகிரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற  நீதிபதி லிங்கம், நீதித்துறை  நடுவர்கள் தமிழினியன், செந்தில்கு மார், முதுமலை புலிகள் காப்பக கள  இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதி யாக மாவட்ட வன அலுவலர் கௌதம் நன்றி கூறினார்.

;