districts

img

வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

சேலம், பிப்.27- வாழப்பாடி அருகே உள்ள பழனி யாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி  வியாழனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி வட் டம், பழனியாபுரத்தில் வியாழனன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி யினை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் முன் னிலையில், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளி லிருந்து 700 காளைகளும், 400 மாடுபிடி  வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக் கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டன. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற் கொள்ளப்பட்டன. முன்னதாக, போட்டி யில் அரசு விதிமுறைகள் குறித்து பின் பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந் நிகழ்ச்சியில், சேலம் வருவாய் கோட் டாட்சியர் அ.அபிநயா, கால்நடை பரா மரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் பாரதி, வாழப்பாடி வரு வாய் வட்டாட்சியர் சுமதி, ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.