districts

img

பணி நிரந்தரம் செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப்.25- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி து றையில் பணியாற்றும் பணியாளர் கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர  ஆசிரியர்களைப் பணி நிரந்த ரம் செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ  சார்பில் செவ்வாயன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளர் பாலசுப்பிரமணியம் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், 2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற  நூலகர்கள். கல்வித் துறையில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசி ரியர்கள். பல்நோக்கு மருத்துவப் பணி யாளர்கள் ஆகியோருக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண் டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளி  கல்வி துறையில் பணியாற்றும் பணி யாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். 21 மாத ஊதிய  நிலுவைத் தொகையை அரசு ஊழியர் கள் ஆசிரியர்கள், அரசு பணியாளர் கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள் ளதை உடனடியாக வழங்க வேண் டும். காலவரையின்றி முடக்கி வைக் கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்ப டைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடன டியாக வழங்க வேண்டும். சாலைப்ப ணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. இதில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ் சிறப்புறையாற்றினர்.  ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பிரபு செபாஸ்டியன், தமி ழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் ராணி, பாலசுப்பி ரமணியம் உட்பட 500 க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.