districts

img

ஒருங்கிணைந்த ராணுவத்தேர்வுகள் கோவையில் 5 மையங்களில் நடைபெற்றது

கோவை, செப்.4- மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கி ணைந்த ராணுவத்தேர்வுகள் கோவையில் 5 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளர் தோ்வாணை யம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வு கள் ஞாயிறன்று நடைபெற்றது. இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,856 பேர் எழுத விண் ணப்பித்திருந்தனர். இதனைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார் வையாளர் மற்றும் ஆட்சியர் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 5 தோ்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர், துணை வட்டாட்சியர் நிலை யில் தேர்வு மைய கண்காணிப்பாளா்கள் 9 பேர், அறை  கண்காணிப்பாளர்கள் 78 பேர் ஆகியோர் நியமிக்கப்பட்டி ருந்தனர். காலை மற்றும் மதியம் நடைபெறும் இரண்டு தேர்வுக ளுக்கும் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பாக தேர்வு மையத்துக்குள் தேர்வு எழுதுபவர்கள் வந்து  சேர்ந்தனர். தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு  வாயில் கதவு அடைக்கப்பட்டு அதன்பின் வரும் தேர்வர் கள் அனுமதிக்கப்படவில்லை. செல்போன், டிஜிட்டல் கைக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதிக்க படவல்லை. மேலும், தேர்வர்கள் நுழைவுச்சீட்டுடன், ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஒன்றையும்  எடுத்துவர அறிவுறுத்தப்பட்டிருந்தது அதனை ஆய்வு செய்த  பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே கோவை ஜிடி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ராணுவத்தேர்வுகள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

;