உடுமலை, செப்.4- சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தளி பேரூ ராட்சியின் முன்முயற்சியால் துவங்கப்பட்ட படகு சாவரி திட்டம், சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்ற நிலை யில், பல ஆண்டுகளாக முடங்கிக்கிடப்பதும், இதனை சுற்று லாத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. உடுமலையில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்திமலைக்கு மாநிலம் முழுவ திருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். திருமூர்த்திமலையின் மேல் செயற்கை யாக உருவாக்கபட்ட பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ் வரர் கோவில் மற்றும் அணையின் கரை பகுதியில் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என அனைவரையும் கவரும் வகையில் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்நிலையில், அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில் தளி பேரூராட்சி நிர்வாகத்தால் 1980 ஆம் ஆண்டு படகு சவாரி துவக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் படகு சவாரியை இயக்க பெரிய படகு மூன்றும், சிறிய படகு இரண்டும் வாங்கப்பட்டது. இந்த படகு சவாரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதம் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், 75 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கும் பகிர்ந்து கொள்வது என்கிற நிபந்தனையின் படி படகு சவாரி மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இந்த படகு சவாரி கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படாமல் ்உள்ளது ஏன் என்பது யாருக்கும் விளங்காத மர்மமாக உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிக மான சுற்றுலாப் பயணிகளை கவந்த படகு சவாரி, தற்போது பழுதடைந்த படகுகள் மட்டும் மண்ணோடு மண்ணாக மக்கி போகும் நிலையில் உள்ளது. படகுகள் அனைத்தும் வீணாக போனது. இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீண்டும் புதிய படகுகள் பெற்று திட்டம் செயல்படுத்த வேண்டும். அதேநேரத்தில், பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்த இந்த திட்டத்தை, தனியாரிடம் இந்த படகு சவாரி திட்டத்தை ஒப்படைக்க உள்ளதாக தெரியவருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் அனு மதிக்க கூடாது. அரசு சார்பில் மட்டும் படகு சவாரி திட்டம் தொடங்க வேண்டும். திருமூர்த்தி மலையை மிகவும் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது. தற்போது வரை அதற்கான எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்றனர். இதனிடையே, கடந்த வாரம் சுற்றுலாத் துறை அதிகாரி கள் திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருக்கும் கோவில், சுற்றுலாப் பயணி கவர மலைக்கு மேல் செயற்கை யாக உருவாக்கபட்ட பஞ்சலிங்க அருவி பகுதியை ஆய்வு செய்தனர். ஆனால் பல ஆண்டுகள் செயல்படாமல் இருக்கும் படகுத்துறையை ஆய்வு செய்யாமல் சென்றது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.