ஈரோடு, பிப்.13- ஈரோடு மாவட்டத்தில் மாநக ராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோடு மாநகராட்சி, 48 ஆவது வார்டில் போட்டியிடும் மதசார் பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சு.சிவஞானம், தனது குடும் பத்தினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சுப்பிரமணியன், ஆர்.கோமதி உட் பட கூட்டணி கட்சியின் நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். கோபி நகராட்சி, 27 ஆவது வார் டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜி.ஏ.துரை சாமியை ஆதரித்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முனுசாமி, விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.முத்து சாமி, மின்சார வாரிய ஊழியர் சங்க தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்குசேகரித்த னர். சலங்கபாளையம் பேரூராட்சி, 5 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எஸ்.பாக்கிய லட்சுமிக்கு, வாக்கு கேட்டு கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். நசியனூர் பேரூ ராட்சி, 14 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர் சி.பி.தங்கவேலுவை ஆத ரித்து, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டக்குழு உறுப் பினர் ப.லலிதா, இடைக்கமிட்டி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகி கள் பலர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். கருமாண்டி செல்லிபாளை யம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் மாதேஸ் வரி-க்கு வாக்கு சேகரித்து, திமுக மாநில துணை பொதுச்செய லாளர் ஆந்தியூர் செல்வராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், ஒன்றிய செயலா ளர் கே.பி.சாமி, பேரூர் செயலா ளர் அகரம் மூர்த்தி, சிபிஐ சின்ன சாமி, சிபிஎம் வி.ஏ.விஸ்வநாதன், சுந்தரவடிவேல் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.