districts

img

கோவை: குளங்களின் கால்வாய்கள் தூர்வாரும் பணி

கோவை, மே 15- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள குளங்களுக்கு வரும்  கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கோவை மாநகராட்சி, தெற்கு மற் றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதி களில் அமைந்துள்ள குளங்கள் தூர்வா ரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், கோவை மாநகராட்சி எல் லைக்குள் நரசிம்மபதி, கிருஷ்ணாம் பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, பெரிய குளம், வாலாங் குளம், சிங்கநல்லூர், குறிச்சி குளம் ஆகிய குளங்கள் உள்ளன. இவற்றில் கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, குமார சாமி, செல்வ சிந்தாமணி, பெரிய குளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளங்களில் பல்வேறு வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இக்குளங்கள் ஒன்றுடன் இணையும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டு, அதிகப்படியான தண்ணீர் வரும் பொழுது ஒவ்வொறு குளமும் நிறைந்து, உபரிநீர் நொய் யல் ஆற்றில் வெளியேறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு நடை முறையில் உள்ளது. தற்பொழுது பருவ மழை மற்றும் இயற்கை இன்னல் களினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து குளங்களிலும் தண்ணீர் உள்ளே நுழையும் பகுதி மற்றும் வெளி யேறி அடுத்த குளத்திற்கு செல்லும்  வகையில் வழியில் உள்ள கால்வாய்க ளில் தூர்வாரி பராமரிக்கும் பணி தற்பொ ழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணாம்பதி குளத் திற்கு வரும் மூன்று கால்வாய்களையும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுத்தம் செய் யும் பணி நடைபெற்று வருகிறது. செல்வசிந்தாமணி மற்றும் குமாரசாமி குளங்களுக்கு இடையே உள்ள கால் வாய் 3.725 கி.மீட்டர் நீளத்திற்கு கடந் தாண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதே போல், செல்வசிந்தாமணி குளத்திலி ருந்து பெரியகுளத்திற்கு வரும் கால் வாய் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டிலும் சுத் தம் செய்யும் பணி நடைபெற்று வருகி றது. குறிச்சி குளத்திற்கு, குறிச்சி அணைக்கட்டு பகுதியிலிருந்து வரும்  ராஜவாய்கால் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டி லும், செங்குளத்திற்கு வரும் 2 கால்வாய் களும் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டு வருகிறது, என்றனர்.