districts

img

ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைப்பு பணி துவக்கம்

நாமக்கல், அக்.3- குமாரபாளையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏரி  புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி  உள்ளது. சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த ஏரியின் கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால், தேங்காமல் வீணாக சென்று விடுகிறது. எனவே, புதிதாக கரையை கட்டி தண்ணீரை சேமித்து வைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஊராட்சி தலைவர் புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10  லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்பகுதி விவசாய  கிணறுகளில் நீர் பெருகும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலை யில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால் நடைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

;