பொள்ளாச்சி, டிச. 4- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபா யாக உயர்த்தி வழங்க மாற்றுத்திற னாளிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பர்வானா நினைவரங்கில் செவ்வாயன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்து சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இப் பேரவை கூட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் நலச்சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித் தார். இப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.புனிதா பேசுகை யில் :- மத்திய மோடி அரசு, மாற்று திறனாளிகளுக்கான திட்டங் களை செயல்படுத்தாத முற்றிலும் வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ல் மாற் றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தினை ஐ.நா.சபை கொண்டு வந்தது. இதனை அமல்படுத்த இந்தியாவும் கையொப்பமிட்ட நிலையில் இன்றளவும் அதனை நிறைவேற் றாமல் அரசு காலம் தாழ்த்தி வரு கிறது. இதற்காக மாற்றுதிறனா ளிகள் சங்கம் பல கட்ட போராட் டங்களையும், இயக்கங்களையும் நடத்தியும் மத்திய பா.ஜ.க அரசு சிறிதும் கவனத்தில் கொள்ளாத தால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் கேள்குறி யாகியுள்ளது. ஆகவே, இச்சட் டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா பொறுப் பாளர் டி.விஜயா, சி.மகாலிங் கம், வேல்முருகன், முருகானந்தம், வீ.தம்பு மற்றும் ஹோமியோபதி மருத்துவர் பாலகிருஷ்ணன், பாலு மற்றும் மாற்றுத்திறனாளி கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.