districts

img

தனியார் மகளிர் கல்லூரியில் வருமான வரித்துறையினர் ஆய்வு

நாமக்கல், மே 17- திருச்செங்கோடு அருகே உள்ள தனியார்  மகளிர் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எளையம்பாளையம் பகுதி யில் செயல்பட்டு வரும் விவேகானந்தா கல்வி  குழுமத்தில் மருத்துவம், பொறியியல், கலை - அறிவியல், ஆசிரியர் பயிற்சி, செவி லியர் என 18க்கும் மேற்பட்ட கல்லூரி களை உள்ளடக்கிய மகளிர் கல்லூரி நிறு வனமான விவேகானந்தா கல்லூரி நிறுவ னம் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், இக்கல்லூரியில் சேலம்,  கோவை மண்டலத்தைச் சேர்ந்த 20க்கும்  மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரி கள், கல்லூரி வளாகத்தில் உள்ள பல்வேறு  இடங்களிலும், இரண்டு வீடுகளிலும் சோத னையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக  வெள்ளியன்றும் இந்த சோதனை நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும்  நேரத்தில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும்,  அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒரு வரான தம்பி துரையும், விவேகானந்தா கல்லூரி தாளாளர் கருணாநிதியும் நெருங் கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்  தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப் பட்டதா? ரொக்கப்பணம் ஏதாவது கைப்பற் றப்பட்டதா? என்பது குறித்து தெரிய வரும்  என அதிகாரிகள் தெரிவித்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல்  தொகுதிக்குட்பட்ட பகுதியில் பதிவாகி யுள்ள வாக்கு பெட்டிகள் அனைத்தும் இந்த  கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;