திருப்பூர் தெற்கு தாலுகா, சந்திராபுரம் தொடக்கப்பள்ளி, சிட்கோ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பல்லடம் தாலுகா, காளிவேலம்பட்டி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டு, உழைப்பு தானம் செய்தனர். இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்ட துணைச்செயலாளர் மோகனப்ரியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜிதா, பல்லடம் தாலுகாக்குழு உறுப்பினர் பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.