districts

img

விதிமீறல் நடந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை

உதகை, செப்.13- பேரிடர் தடுப்பு, கட்டட விதி மீறல், சுற்றுச்சூழலை பாதுகாக்கப்படும் என நீலகிரி புதிய ஆட்சியராக பொறுப் பேற்ற அருணா தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்திற்கு 115 ஆவது ஆட்சியராக அருணா புதனன்று முறைப் படி பதவியேற்று கொண்டார். இதன்பின் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், நீலகிரி மலை மாவட்டம் என்ப தால், மற்ற மாவட்டத்தை காட்டிலும் தனித்துவம் மிக்கது. எந்த  பணிகளானாலும்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் புதிய தொழில்  நுட்பத்தை பயன்படுத்தி தேவையான பாதுகாப்பு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். விதி மீறிய கட்டடங்கள் மீது பார பட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுற்றுச்சூழ லுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிளாஸ்டிக் தடுப்பு நட வடிக்கையாக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்படும். பழங்குடியினர் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கு முக் கியத்துவம் கொடுக்கப்படும். விதிமீறில் சம்பவங்கள் என் றால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.