districts

img

ஐகேஎப் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடக்கம்

திருப்பூர், அக். 12 - திருப்பூர் அருகே ஐகேஎப் வளா கத்தில் 48 ஆவது சர்வதேச பின்ன லாடை கண்காட்சியை மாநில செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள இந் திய ஆயத்தஆடை கண்காட்சி  (ஐகேஎப்) வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூர் மட்டுமின்றி இந்திய பின் னலாடைகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கு ஐகேஎப் கண் காட்சி முக்கிய ஊடகமாக செயல் பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது திருப்பூர்  மட்டுமின்றி இந்திய பின்னலாடை துறை நூல்விலை மற்றும் மூலப்பொ ருட்கள் விலை உயர்வு, வெளிநாட்டு  சந்தையில் மந்த நிலை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் கடும் சிரமத் தைச் சந்தித்து வருகிறது. இந்த சூழ லில் பல்வேறு உலக நாடுகளின் வர்த் தகர்களை இங்கு இந்த கண் காட்சிக்கு வரவழைப்பதன் மூலம் ஆர்டர்களை ஈர்க்க முடியும் என பின் னலாடைத் துறையினர் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம் பாட்டு கழகம், திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பு மற்றும் ஏற்று மதி வர்த்தக ஏஜென்சி இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய் துள்ளனர்.

திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த முன்னணி ஆடை உற் பத்தியாளர்கள் தங்கள் ஆடைகளை காட்சிப்படுத்தி உள்ளனர். 66 அரங் குகளுடன் 3 நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியைக் காண அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடு கள், ஜப்பான், ஆஸ்திரேலியா உள் ளிட்ட நாடுகளில் இருந்து 200க்கும்  மேற்பட்ட வர்த்தகர்கள் வர உள்ள தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த னர். இந்த கண்காட்சியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி  வைத்தார். பின்னர் காட்சிப்படுத்தப் பட்டுள்ள ஆடைகளை பார்வையிட்டு  ஆடைகளின் சிறப்பு குறித்து கேட்ட றிந்தார். இக்கண்காட்சியில் பருத்தி யால் செய்யப்பட்ட ஆடைகள் மற் றும் மறுசுழற்சி செய்யப்பட்ட இழை யால் தயாரிக்கப்பட்ட ஆடைகள்  அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட் டுள்ளது. இக்கண்காட்சி குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் தலைவர் ஏ. சக்திவேல் கூறுகையில், மூலப்பொ ருட்கள் விலை உயர்வு, ரஷ்யா - உக் ரைன் போர் உலக நாடுகள், பொருளா தார சுணக்கம் என பல்வேறு காரணங் களால் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள விரும்புகின்றனர் இத னால் வரும் நாட்களில் பின்னலாடை  வர்த்தகம் பெருகும் என்பதால் உற் பத்தியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.