திருப்பூர், அக். 3 - திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்க ளில் மதவெறிக்கு எதிராகவும், மக்கள் ஒற்று மையை வலியுறுத்தியும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.பெ.தி.க., திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட் டம் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில், இந் திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காம ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி.,
புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம். இசாக், ம.தி.மு.க மாநகர மாவட்ட செயலா ளர் ஆர்.நாகராசன் எம்.சி., விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், முஸ்லீம் லீக் கட்சி யின் மாவட்ட செயலாளர் சையத் முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலா ளர் அ. முகமது உசேன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட தலைவர் முகில் இராசு, திரா விடர் கழகம் மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, தபெதிக மாவட்ட செயலாளர் சன்.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மதவெறிக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும், மக்கள் ஒற்று மையை வலியுறுத்தியும் அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக் கான இடங்களில், மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்த முடிவின்படி திருப்பூர் மாவட்டத் தில் திருப்பூர், அவினாசி, ஊத்துக்குளி, காங் கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய 7 மையங்களில் மனித சங்கிலி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட இயக்கத்தில் 25 க்கும் மேற் பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள் ளன. மேலும் மதச்சார்பற்ற சக்திகளும், அமைதியை விரும்பும் அனைத்து தரப்பின ரும் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கு பெற வேண்டுமாறும் கேட்டுக் கொள்வது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.