districts

img

பலத்த காற்றால் வீடு சேதம்

பலத்த காற்றால் வீடு சேதம் கோபி, மே 15- கோபி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை யால் குடிசை, வாழை, மின் கம்பங்கள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்தில் கடந்த ஒருமாதமாக மக் களை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில்  கோபி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான குள்ளம்பாளையம், நாதிபாளையம், அய்நம்புதூர், செங்கோட்டையன்நகர், உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் சுமார் ஒருமணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதில் பல் வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடியது. பலத்த சூறாவளி காற்றால் குள்ளம்பாளையம் பகுதி யில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமாயின். மேலும் செங்கோட்டையன் நகர் பகுதியில் சீரங்கன் என்பரின் குடிசையை சூறாவளி காற்று  புரட்டி போட்டது. சில பகுதியில் சாலையோர மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமாயின சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வாழை சேதமான விவசாயிக ளும் குடிசை சேதமான கூலி தொழிலாளி வேதனை அடைந்த னர். இதனால், அரசு தரப்பில் நிவாரணம் வேண்டி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;