districts

img

ஊதியம் வழங்கக்கோரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

உதகை, செப்.8- ஊதியம் வழங்கக்கோரி குன்னூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புறநோயாளிகள், உள்நோயாளிகள், குழந்தைகள் வார்டு, அவ சர சிகிச்சை உள்ளிட்ட வார்டுகள் உள்ளன. இம்மருத்துவமனையில் தூய்மை பணி, புதர் களை வெட்டி அகற்றுதல் போன்ற பணிக ளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி 30 ஒப்பந்த பணி யாளர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப் படவில்லை என்றுக்கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து ஒப்பந்த பணியாளர் கள் கூறுகையில், குன்னூர் அரசு மருத்துவ மனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  30 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஒப்பந்தம் மூலம் ரூ.6 ஆயிரம் ஊதியம் மாதந்தோறும் 4 ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த சம்ப ளத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதி யடைந்து வருகிறோம். இந்நிலையில், கடந்த மாத சம்பளம் ஒருவ ருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மற்றவர்க ளுக்கு வழங்கவில்லை. கொரோனா காலத் தில் பணியிலிருந்த போது, ஒப்பந்த பணியா ளர்கள் சிலருக்கு தொற்று பாதித்தது. அதற் கும் எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நிலுவையில்லாமல் சம்பளம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.