districts

img

பெண்ணைத் தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் - போலீசார் வழக்குப்பதிவு

கோவை, டிச.1- கோவையில் இந்து முன்னணி பிரமு கர் ஒருவர் நிலத்தை அபகரிக்க முயன்ற போது, அதனை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திலகம். இவருக்கு செம்மாண் டம்பாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. இதன் அருகே சமீபத்தில் திருப் பூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுக ரான முருகேசன் என்பவர் இடம் வாங்கியுள் ளார். வழித்தடம்  தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வழித்தடத்தை  முருகேசன் அடைக்க முயன்றபோது, அதை திலகம் தடுத்துள்ளார். அப்போது முருகேசன், தில கத்தின்  செல்போனை  தட்டி விட்டதுடன், அவரையும் தாக்கினார்.  இதனையடுத்து திலகம் தன்னை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் முரு கேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  கரு மத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்  பேரில் கருமத் தம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன் னணி பிரமுகர் முருகேசன் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவு களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில், முரு கேசனுக்கும்,  திலகத்திற்கும்  வாக்குவாதம் நடக்கும்  காட்சிகளும், செல்போனை தட்டி விட்டு, பெண்ணைத் தாக்கும் வீடியோ காட்சியும்  இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.