திருப்பூர், செப். 8 – கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. தொடக்கத்தில் தடுப் பூசி செலுத்திக் கொள்வதில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல், அச்சம் நிலவியது. எனினும் நாள டைவில் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 20 லட் சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனினும் இம்மாவட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என சுகாதாரத்துறை யினர் தெரிவித்துள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி யவர் பலர் இன்னமும் இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளனர். நோய் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாகத்தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். வரும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்த னர்.