கோவை, அக்.7- கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டு களில் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கிருந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படு கின்றன. இதில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக் காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால், மீதேன் எரி வாயு உருவாகி வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பை களை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம் பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், பாரதி பூங்கா, பனை மரத்தூர், ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில். தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி வியாழனன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நுண்ணுயிர் மையங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில், அரசு அலுவலகர்கள் பலர் கலந்து கொண் டனர்.