ஈரோடு, ஜூலை 18- தேவைக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு பின்னர் வேலை தராமல் இருப் பதை ஏற்க முடியாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என என வலியுறுத்தி ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை பணியா ளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவ மனை செவிலியர் லதா என்பவர் கூறு கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஆர்டிடி நிறுவனத்தின் பெருந் துறை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் செவிலியராக பணியில் சேர்ந்தேன். அன்று முதல் தொடர்ந்து பணியாற்றி வந்த என்னை, மருத்துவ மனை நிர்வாகம் பணி நிரந்தரம் செய் யவில்லை. இந்நிலையில் தனியாக வும், நான் அங்கம் வகித்த தொழிற் சங்கம் மூலமாகவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக சட் டப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொண்டேன். இதன்தொடர்ச்சி யாக பணி நிரந்தர தகுதி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஈரோடு தொழிலாளர்
அலுவலர் முன் பும் தொழிற்தாவா தொடுக்கப்பட் டுள்ளது. இதற்கிடையில் ஐஆர்டிடி பெருந் துறை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையானது அரசு ஏற்று அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையாக செயல்பட்டு வருகிறது. அரசு இம்மருத்துவக் கல்லூரி மருத் துவமனையை ஏற்றுக்கொண்ட போது என்போன்ற ஊழியர்களை யும் தன்பால் ஈர்த்துக் கொண்டு பணி நிரந்தரம் செய்திடும் என எதிர்பார்த்தி ருந்தோம். ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பெருந் தொற்று காலத்தில் தொடர்ச்சியாக வேலை கொடுத்து வந்த மருத்துவ மனை நிர்வாகம் கொரோனா பெருந் தொற்று சற்று ஓய்ந்ததற்குப் பிறகு தொடர்ந்து வேலை அளிப்பதில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தில் தொடர்ந்து முறையிட்டும் பய னில்லை. எனவே, எனக்கு தொடர்ந்து வேலை கொடுக்க ஆவண செய்ய வேண்டும், என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திர ளான செவிலியர்கள், மருத்துவ பணி யாளர்கள் மற்றும் சிஐடியு தலைவர் எஸ்.சுப்பிரமணியன் மனு அளித் தனர்.