districts

img

தீ தடுப்பு செயல் விழிப்புணர்வு

சேலம், நவ.10- சேலம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோடை காலம் மற்றும் மழைக் காலத்தில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்ப்பது மற்றும்  அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து தீயணைப்பு குழுவினர் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே நேரடி யாக சென்று செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத் துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு குறித்த  செயல் விளக்க சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை  மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் துவக்கி வைத்தார்.  இதில், தீயணைப்பு துறை அதிகாரிகள், எந்தெந்த வகை களில் தீ விபத்து ஏற்படுகிறது? அதை தடுப்பதற்கான வழி முறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தீயை அணைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து செயல் விளக்கத்தோடு செய்து காட்டினர்.