நாமக்கல், ஜன.4- பள்ளிப்பாளையத்தை அடுத்த வெப் படையில் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.4 கோடி மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமானது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தை அடுத்த வெப்படையில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் ரயான் பஞ்சை நூலாக மாற்றும் இயந்திரத்தில், வெப்பம் காரணமாக திடீரென தீப்பொறி கிளம்பியது. இந்த தீப்பொறி அருகில் இருந்த பஞ்சு குவியலில் பட்டதால், தீ பிடித்து எரிய துவங்கியது. இதனால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலா ளர்கள், அலறியடித்து வெளியில் ஓடி சென்ற னர். மேலும், சிலர் பஞ்சு மூட்டைகளின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற னர். ஆனால், தீ மளமளவென அடுத்த குடோ னுக்கும் பரவியது. இதுகுறித்து தகவ லறிந்து குமாரபாளையம், வெப்படை, சங்க கிரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், பஞ்சு மூட்டைகளின் அடிவரை பரவியால் தீ தொடர்ந்து எரியத் துவங்கி யது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தையும், ஆலை யின் திறந்தவெளி பகுதிக்கு கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். சுமார் 7 மணி நேரம் போராடி தீயணைப் புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தால் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரயான் பஞ்சு பேல்களும், இயந்திரங்களும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.