உடுமலை,பிப்.25- தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி சர்க்கரை ஆலையை நடப்பு ஆண்டு இயக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என 25 ஆம் தேதி உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். உடுமலை கோட்டாட்சியர் அலு வலகத்தில், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர், மடத்துக்குளம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு களாக மூடியிருக்கும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடப்பு ஆண்டு இயக்க வேண்டும். மடத்துக்குளம், வேடபட்டி கிரா மத்தில் சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் அமராவதி நாற்றுப்பண்ணை என்ற பெயரில் பொது மக்கள் பங்களிப் பில் அறக்கட்டளை பெயரில் சிறப் பாக இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நாற்றுப்பண்ணை இயங்கவில்லை. அந்த இடத்தில் பழமையான மரங்களை வெட்டி எடுத்து வருகிறார்கள். பொது மக்க ளின் பங்களிப்பில் செயல்பட்ட இடத்தில் அரசின் உரிய அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும். அந்த நிலத்தை அரசு பராமரிக்க வேண்டும் என்றார் கள். மேலும் உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு பணம் முறை யாக செலுத்தி ஒரு ஆண்டுக்கு மேல் ஆன நிலையில் இன்றுவரை மின் இணைப்பு தராமல் உள்ளனர். பணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் மற்றும் பயிர்கடன் விவசா யிகளுக்கு வழங்க வேண்டும். பாலப்பம்பட்டியில் செயல்படும் கூட்டுறவு சங்கத்தை மைவாடி, பெரியகோட்டை மற்றும் கண்ணம நாயக்கனூர் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். மிக வும் அதிகமான விவசாயிகள் பயன் படுத்தும் இந்த கூட்டுறவு சங்கத்தில் நிலையான செயலாளர் இல்லாத காரணத்தால் பயிர் கடன் மற்றும் உரங்களை விவசாயிகள் பெற முடியாமல் உள்ளது. எனவே நிரந் தர செயலாளர் தேவை என்றார் கள். பொது மக்கள் மற்றும் கால் நடைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தெரு நாய்களை கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுக் குடிநீர் திட் டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். வனவிலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து பேசினார்கள்.