districts

img

விவசாய பயிரையும், உயிரையும் பாதுகாத்திடுக சிறுமுகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம், நவ.5- மேட்டுப்பாளையம் பகுதியில் ஊருக்குள் நுழையும் வன விலங்கு களிடம் இருந்து தங்களது விவசாய  பயிரையும், உயிரையும் பாதுகாக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் ஊடுருவல் காரணமாக ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்கள் அதிகரித்து வருகிறது. யானை, காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்களால் விவசாய பயிர்கள் பெருமளவு  அழிக்கப்பட்டு வருவதோடு, யானை மற்றும் காட்டுபன்றிகளின் தாக்குதலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு உட னடியாக நிரந்தர தீர்வு காண  வலியுறுத்தி மேட்டுப்பாளை யத்தை அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலி யுறுத்தும் பத்மஸ்ரீ விருது பெற்ற 104 வயதான பாப்பம்மாள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இதில், தங்களது விவசாய பயிர்களையும், மனித  உயிர்களையும் காக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காட்டை விட்டு வெளியேறும் வன  உயிரினங்களால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க  ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி யாக நடவடிக்கை எடுத்து இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண  வேண்டும், இந்த நிலை அடுத்த 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்தால் வன விலங்குகளால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தோர் அரசு அலுவலகங்களில் குடியேறுவது, மனித சங்கிலி உள்ளிட்ட பல  கட்ட போராட்டங்களை முன்னெ டுப்பது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.