districts

விவசாய நிலத்தில் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதம்

தருமபுரி, டிச.4- தாமலேரிப்பட்டியில் விவசாயி நிலங்களில் புகுந்த மழை நீரால் மஞ்சள், நெல், மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர் கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீழ்மொரப்பூர்  பஞ் சாயத்திற்கு உட்பட்ட தாமலேரிப்பட்டி பகுதிகளில்  தொடர் மழைபெய்து வருகிறது. இதனை தொடர்ந்து மழை நீர் செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால், விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்து 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள், நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட  பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக, நெல் பயிர்கள் விளை  நிலங்களில் சாய்ந்து உள்ளதால் நெல் மணிகள் வயல் வெளியில் விழுந்து அதில் முளைப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும்  மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்து அரவை அறைக்கு கொண்டு சென்றால் கிழங்குகள் அழுகி துர் நாற்றம் வீசுகிறது என வியாபாரிகள் தெரிவிப்பதால், கிழங்குகளை ஏரிகளிலும், சாலைகளிலும் கொட்டும் அவல நிலை உருவாதாக விவசாயிகள் வேதனை தெரி வித்துள்ளனர். முன்னதாக, அப்பகுதியில் உள்ள வனத்தில் சிறிய தடுப் பணையில் இருந்து நீர் நிரம்பி வெளியேறி வருகின்றது. இந்த நீர் செல்லும் வாய்க்கால் பாதைகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வாய்க்கால்களில் செல்லவேண்டிய நீரா னது அருகில் உள்ள வயல்வெளிகளில் செல்வதால் பயிர் கள் முற்றிலும் முழ்குவதாக கூறப்படுகிறது. ஆகவே நீர் செல்லும் வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் உபரி நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக் கெடுத்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;