districts

போலி தங்க கட்டி மோசடி: பெண் சாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது

கோவை. நவ. 27- பூஜை செய்வதாக கூறி போலி தங்க கட்டி விற்ற  பெண் சாமியார் உள்ளிட்ட மூன்று பேரை கோவை யில் காவல் துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹரிமா என்ப வரது மனைவி ரமணா (40). இவர் கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் உள்ள ஒரு தோட் டத்தில் குடியிருந்து வருகிறார். இவர் வாரந்தோறும் வெள்ளியன்று சாமி ஆடி குறி சொல்வதை வழக்க மாக கொண்டுள்ளார். இவரிடம் குறி கேட்க வரும் பெண்களிடம் ரமணா, தன்னிடம் வெளிநாட்டு தங்க கட்டிகள் இருப்பதாகவும், அவற்றை மார்க் கெட் விலையைவிட குறைந்த விலைக்கு தருவ தாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதனால் ரமணாவின் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அப்புகாரின் பேரில் காவல் துறையினர் ரமணா வின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த 6 போலி தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின் னர் வீட்டில் இருந்த ரமணா மற்றும் சுரேஷ்பாபு (23), சீனிவாஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர். மேலும், யாராவது ரமணா விடம் தங்க கட்டிகளை வாங்கி ஏமாந்தவர்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார் கள். பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்ப வம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

;