districts

img

மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது புனையப்பட்ட வழக்கு தள்ளுபடி

உதகை, செப்.23- தோடர் மக்களுக்கான போராட்டத்தை முன்னின்று நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது புனையப் பட்ட வழக்கு தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு உதகையில் உள்ள வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி தோடர் இனமக்க ளின் வாழ்விட கோரிக்கைகளை முன்வைத்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட் டத்தில் கலந்து கொண்ட 40 பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட தோடர்  இனமக்களை காவல் துறையினர் கைது செய் தனர். மேலும், அப்போராட்டத்தை முன் னின்று நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய நீலகிரி மாவட்ட செயலா ளர் ஆர்.பத்ரி, இடைக்குழு செயலாளர் ஆர். சங்கர்லிங்கம் உட்பட 5 பேர் மீது காவல் துறையினரால் பொய் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கு ஐந்தாண்டுகளாக உதகை  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், அந்த வழக்கை வெள்ளியன்று தள்ளுபடி செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

;