districts

காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்கிடுக

ஈரோடு, அக்.5- காலதாமதமின்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தினர் சென்னை, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய் யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சாலை  ஆய்வாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தா.திருமுருகன் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது, தமிழகத்தில் நெடுஞ் சாலைத்துறையில் ஆண்களுக்கு இணையாக பெண் சாலை ஆய்வா ளர்கள் அதிகளவில் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், திருச்சி வட் டம், கீரனூர் உட்கோட்டத்தில் இள நிலை பொறியாளராக பணியாற்றும் சாலைசிவபாதம் என்பவர் பெண் சாலை ஆய்வாளர்களிடம் தொடர்ச் சியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள் ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தொழில் அலுவ லர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவி உயர்வு வழங்க அரசாணை இருந்தும் காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும். பதவி உயர்வு இல்லாமல் கடைசிவரை சாலை ஆய்வாளராக உள்ளவர்களுக்கு அர சாணை நிலை எண்.163ன்படி சாலை  ஆய்வாளர் நிலை 1 மற்றும் நிலை  இரண்டை இணைத்து சாலை ஆய் வாளர் என்ற ஒரே பணியிடமாக வகைப்படுத்தி சிறப்பு நிலை, தேர்வு நிலை வழங்கிட வேண்டும்.  சாலை ஆய்வாளர் பணியி டத்தை நிரந்தர பணியிட வரிசையில் கொண்டு வர வேண்டும். உடன்பாடு இல்லாத மிதிவண்டி படியை அரசா ணையின்படி இருசக்கர வாகன படி யாக வழங்க வேண்டும். சாலை ஆய் வாளர் என்பதை திறன்மிகு உதவி யாளர் என்று மாற்றம் செய்ததை மீண்டும் சாலை ஆய்வாளர் என்றே மாற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அக்.18 ஆம்  தேதி காலை 10 மணிக்கு சென்னையி லுள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

;