சேலம், மே 15- சங்ககிரி அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற் பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் அருகே உள்ள பெரியத் தாள் கோவில் வீதியைச் சேர்ந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் சண்முகராஜா (39). இவர் ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு 22 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டி வந்தார். சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் பேருந்து வந்தபோது, சண் முகராஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இத னையடுத்து கட்டுப்பாட்டினை இழந்த அரசுப்பேருந்து சாலை யின் மையப் பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 22 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். இதைத்தொடர்ந்து மயக்கம டைந்த ஓட்டுநர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து சங்ககிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.