districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தருமபுரி, செப்.13- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மோட்டார் வாகன அலுவ லகத்தில், போக்குவரத்து துறை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.  வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் மட் டும் ஓட்டுநர் பள்ளியில் பயின்றோரை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தர விட்டிருந்தார். இதை திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவ தாக அறிவித்தனர். அதன்படி, கூட்டமைப்பு சார்பில் திங்கட் கிழமை முதல் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்து தங்க ளது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு  ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் சரவணன்  கூறுகையில், பொது மக்களுக்கு வாரத்தில் 3 நாளும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாண வர்களுக்கு 2 நாளும் ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஓட்டுநர், பழகுநர் உரிமத் தேர்வுகளை மட்டும் புறக்கணித்துள்ளோம், என்ற னர்.

பத்திரிகையாளர் பெயரில் மோசடி கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை

ரன் எச்சரிக்கை கோவை, செப்.13- பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடு படும் நபர்களை கண்டறிந்தால், அவர்கள் மீது தக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில  நபர்கள், தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரு கிறேன் என்று பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து விடு வதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வர பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர் கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டு மில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப் படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்தி ரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலி யான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பொது  மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத் தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில், பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சிய ரிடம் தகவல் தெரிவிக்கும்படி, அரசு அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்ட வர்கள், உடனடியாக 94980 42423 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்: 48.86/60 அடி 
நீர்வரத்து: 997 கன அடி
வெளியேற்றம்: 1045 கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 87.96/90 அடி
நீர்வரத்து: 1314கனஅடி
வெளியேற்றம்: 911கன அடி.

பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா

ஈரோடு, செப்.13- மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த வர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சித்தோடு அருகே கன்னிமாக்காடு, தந்தை பெரி யார் நகரைச் சேர்ந்தவர்கள் வந்திருந்த னர். அப்போது, அவர்கள் ஆட்சியர்  அலுவலக நுழைவாயில் அருகே தரை யில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறு கையில், ஆதிதிராவிடர் நலத்துறைக் குச் சொந்தமான பெரியார் நகர் பகுதி யில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். எங்களுக்கு இலவச பட்டா அல்லது வீடு கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து மனு அளித்து வருகி றோம்.  இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர், நாங்கள் வசிக் கும் பகுதியில் ஒரு இடத்துக்கு 3 பேருக்கு பட்டா வழங்கியுள்ளார். அந்த இடத்துக்கு பட்டா வழங்கியதில், பய னாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள் ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலரிடமே அந்த மனுவை விசார ணைக்கு அனுப்புகின்றனர். எனவே, ஆட்சியர் வந்தால் மட்டுமே  கலைந்து செல்வோம் எனக்கூறி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

உலக எழுத்தறிவு தினம் கொண்டாட்டம்

திருப்பூர், செப்.13- திருப்பூரில் செவ்வா யன்று உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 13 உலக எழுத்தறிவு தினத்தை முன் னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில்  மாணவர் களிடையே வாசிப்பு பழக் கம், கற்பனைத் திறனை ஊக் குவிக்கும் வகையில் பள்ளி களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேடர்பாளையம் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளியில் புத்தக கண்காட்சி மற்றும் வாசிப்பு இயக்கம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் திர ளான மாணவர்கள் கதை, அறிவியல் சார்ந்த புத்தகங் களை வாங்கி பயனடைந் தனர்.

மின் கட்டண உயர்வு: பின்னலாடை தொழில் கூட்டமைப்பு கோரிக்கை

திருப்பூர், செப். 13 - தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்குமாறு திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்: பனியன் தொழில் மாநக ரமான திருப்பூரில் வருடம் சுமார் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஏற்று மதி வர்த்தகமும், சுமார் ரூ.30 ஆயிரம் கோடி உள்நாட்டு  வர்த்தகமும் என மொத்தம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி  மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டு களாக தொடர்ச்சியாக பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா தொற்று முடக்கம், மூலப்பொருளான நூல்  விலை நிலையில்லாமல் இருப்பது, தொழிலாளர் பற்றாக் குறை என பல்வேறு பிரச்சனைகளை  எதிர்கொண்டு சமாளித்து பனியன் தொழிலை காப்பற்றிக் கொண்டு வரு கிறோம். திருப்பூர் 90 சதவிகிதம் சிறு, குறு, நடுத்தர தொழில் களை சார்ந்துள்ளது. எஞ்சியுள்ள 10 சதவிகிதம் மட்டுமே பெரிய நிறுவனங்கள். அவர்கள் அவர்களுடைய சொந்த “சூரிய ஆலை” மற்றும் “காற்றாலை” நிறுவனங்களின் மூலம்  மின் கொள்முதல் செய்து தமது தேவையை பூர்த்தி செய்து  கொள்கின்றனர். ஆனால் சிறு, குறு தொழில் உற்பத்தி யாளர்கள் முழுக்க, முழுக்க  தமிழக மின்சார வாரியத்தை  நம்பி தொழில் செய்கின்றனர். இப்போதுள்ள நிலையில் 70 சதவிகித நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. மீதம் 30 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டு வருகின்றன. தமிழக அரசின் மின்சாரக்  கட்டண உயர்வால் இந்த 30 சதவிகித தொழில் செய்ப வர்களும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் அதனைச் சார்ந்த ஒட்டு மொத்த உப தொழில்  செய்யும் நூற்பாலை, நிட்டிங், டையிங், காம்பேக்டிங், பிரிண்டிங், எம்பிராய்டரி, எலாஸ்டிக் உற்பத்தி போன்ற அனைத்து தொழில்களும் பாதிப்பிற்கு உள்ளாகும். லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்  ஏற்படும். எனவே தமிழக அரசு சமீபத்தில் ஏற்றிய மின்  கட்டண உயர்வு திருப்பூர் தொழிலுக்கு மேலும் அழுத்தத்தை  கொடுக்கும். ஆகையால் இந்த மின்கட்டண உயர்வை திருப்பூர் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன்  கருதி திரும்ப பெறும்படி திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் திருப்பூர் தொழிலை மீட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். இக்கோரிக் கையை நேரில் தெரிவிக்க முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் எம்.பி.முத்துரத்தினம் கேட்டுக் கொண்டி ருக்கிறார்.

கல் குவாரி தொழில், வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி தொழிலாளர்களை திரட்டி உண்ணாவிரதம்

திருப்பூர், செப். 13 - கல் குவாரி முறைகேட்டுக்கு எதிராக தனி விவ சாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில், கல்  குவாரி தொழிலை பாதுகாக்கவும், வாழ்வாதாரம் காக்கவும்  கல் குவாரி தொழிலாளர்களைத் திரட்டி குவாரி உரிமை யாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். கோடங்கிபாளைம் கிராமத்தில் எழில் புளுமெட்டல் என்ற  தனியார் கல் குவாரியில் விதிமுறையை மீறி, முறைகேடாக கூடுதல் கற்களை வெட்டி விற்பனை செய்வதுடன், சுற்றுச் சூழலுக்கும், சுற்று பகுதி விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக விவசாயி விஜயகுமார் என்பவர் குற்றம்  சாட்டினார். மேற்கண்ட கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பத்து  நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டார். இதன் பின்னணியில் எழில் புளுமெட்டல் கல் குவாரி விதி முறை மீறலில் ஈடுபட்டதாகவும், இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு  பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் அந்த கல் குவாரியின் உரி மத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உத்தரவிட்டார். அத்துடன் அதே பகுதியில் எஸ்.ஜி.புளூமெட்டல் என்ற கல்குவாரி விதிமீறலில் ஈடுபடுவதாகக் கூறி, அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மற்றுமொரு விவசாயி செந்தில்குமார் என்பவர் கடந்த 6ஆம் தேதி முதல் எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  இந்த பின்னணியில் கல் குவாரி தொழிலைப் பாதுகாக் கவும், இதை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் வலியுறுத்தி திங்களன்று (செப்.12) ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கல் குவாரி கள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி, மாவட்டத் தலைவர்  பாலு உள்பட பலர் இதில் பங்கேற்றனர். கல் குவாரிகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், லாரி, வேன் ஓட்டு நர்கள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீமுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் மேற்கொள்ளும் போராட்டத்தை காரண மாக வைத்து கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்  கூடாது, இதனால் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்வா தாரம் பாதிக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில் செவ்வாயன்று காரணம்பேட்டை பகுதி யில் கல் குவாரி உரிமையாளர்கள், கல் குவாரியில் வேலை  செய்யக்கூடிய தொழிலாளர்கள், வாகனங்களை இயக்கக் கூடிய ஓட்டுநர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உண்ணா விரதம் மேற்கொண்டனர். கல் குவாரிகள் மீது நடவடிக்கை  எடுக்கக் கூடாது, கல் குவாரி தொழிலையும், வாழ்வாதாரத் தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினர். கல் குவாரிகளில் முறைகேடாக அதிக அளவு வெடி  மருந்துகளை பயன்படுத்தி கூடுதல் கற்களை வெட்டி விற் பனை செய்வது, சுற்று வட்டார விவசாயப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மாசுபாடு பிரச்சனைகள், விதிமுறை களை மீறி செயல்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கல் குவாரி உரிமையாளர்கள் மறுப்புத் தெரி வித்தனர். அதேசமயம் திங்களன்று விவசாய அமைப்புகளைச் சேர்ந்தோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் கல் குவாரிகளை முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும், விதிமுறைப்படி செயல்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும், சுற்று வட்டார விவசாயிகள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற் படுத்தக் கூடாது, விதிமீறலில் ஈடுபடும் குவாரிகளை மூட நட வடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை மிரட்டல் வந்தாலும் சட்டவிரோத முறைகேடான கல் குவாரிகளுக்கு எதிரான விவ சாயிகள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.

தெற்கு எம்எல்ஏ அறிக்கை

திருப்பூர், செப். 13 - செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17  தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக உருவான  நாள் என மூன்று நிகழ்ச்சி களை உள்ளடக்கி முப் பெரும் விழா திமுக சார்பில்  கொண்டாடப்பட்டு வரு கிறது.  அதன்படி வரும் 15ந்  தேதி விருதுநகர் மாவட்டம்,  பட்டம்புதூர், கலைஞர் திடல், அண்ணா நகரில் நடை பெற உள்ள மும்பெரும் விழா விற்கு திருப்பூர் மத்திய மாவட்ட திமுகவின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள் ளுமாறு திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு  தொகுதி  எம்எல்ஏவுமான க.செல்வ ராஜ் கேட்டுக் கொண்டுள் ளார்.

கமிசன் குறைக்க பரிந்துரை செய்வதா?

எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 13 - இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) முகவர் களுக்கு பாலீசி கமிசனைக் குறைப்பதற்கு காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) பரிந்துரை  செய்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கத்தினர் திருப்பூரில் கோபாவசே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு வரும் நிலையில், முகவர்களின் கமிசனை குறைக்கவும், முகவர்கள் இறந்தால்  அவர்களுக்கு வழங்க வேண்டி பாலீசி புதுப்பிப்பு கமிசனை  வாரிசுகளுக்கு வழங்குவதை தடை செய்யும் அரசைக் கண்டித்தும் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத் துவதென எல்ஐசி முகவர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.  அதன்படி திருப்பூர் ஜம்மனை பகுதியில் எல்ஐசி அலுவ லகம்  முன்பாக திங்கள்கிழமை சங்கத்தின் கிளைத் தலைவர்  பழனி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கிளை எல்ஐசி அலுவலகத்தில் வாடிக் கையாளர்களுக்கு உரிய சேவை வழங்குவதில் குறை பாடு உள்ளது. இதைக் களைய, கோவை கோட்டத்தில் இருந்து திருப்பூரை தனியாக பிரித்து சேவையை மேம் படுத்த வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கோட்டப் பொறுப் பாளர் வி.மணிகண்டன் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செய லாளர் பி.குமார் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னார். முகவர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். கமிட்டி உறுப்பினர் சித்ரா நன்றி கூறினார்.

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை  உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் 

தருமபுரி, செப்.13- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் சதீஸ்குமார் தற் காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாண விக்கு உதவி பேராசிரியர் மருத்துவர்  சதீஷ்குமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். பாதிக்கப் பட்ட மாணவி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவக் கல்லூரி  முதல்வர் அமுதவல்லி யிடம் பேராசிரியர் சதீஷ்மீது புகார் கொடுத்துள்ளார். இந்த  மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில், செவ்வாயன்று தருமபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகைதந்த சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தருமபுரி அரசு  மருத்துவகல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு செய்வ தாக அக்கல்லூரி உதவி பேராசிரியர் சதீஸ்குமார் மீது  மருந்துவ கல்வி யக்குநருக்கு புகார் அனுப்பியிருந்தார்.  இந்த மனுவை விசாரிக்க பேராசிரியர் மருத்துவர்கள்  கண்மணி, தண்டர்சிப், காந்தி ஆகியோர் விசாரணை செய் தனர். இதில்  மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப் பட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து உதவி பேராசிரியர் சதீஸ்குமார் மீது உட னடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. துறைரீதியான நடவடிக்கையும் பின்னர் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பெண் தொழிலாளிக்கு 50 வயதில் பென்சன் வடக்கு பொது தொழிலாளர் மாநாடு கோரிக்கை

கோவை, செப்.13- பெண் தொழிலாளிக்கு 50 வயது பூர்த்தியானவுடன் பென் சன் வழங்க வேண்டும் என வடக்கு பொது தொழிலாளர் சங்க  மாநாடு வலியுறுத்தியுள்ளது.  கோவை வடக்கு தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் 7 ஆவது மகாசபை துடியலூர் தடாகம் சாலையில் சங்க தலை வர் என்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. என்.பால மூர்த்தி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி உரை யாற்றினார். முன்னதாக சங்கத்தின் செயலாளர் ஆர்.கேசவ மணி, பொருளாளர் வி.தேவராஜ் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். சிஐடியு இன்ஜினியரிங் சங்க பொதுச் செயலாளர் சி.துரைசாமி வாழ்த்துரை வழங்கினார்.  இதில், நலவாரியத்தில் மாத ஓயவூதியம் 3 ஆயிரம் தடையின்றி வழங்க வேண்டும். 50 வயது பெண் தொழிலா ளிக்கு பென்சன் வழங்க வேண்டும். பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகள் நடைபெறுவதால் மாற்றுச் சாலையை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.    வடக்கு தாலுகாக தலைவராக என்.சிவராஜன், சங்க பொதுச்செயலாளராக ஆர்.கேசவமணி, பொருளாளராக வி.தேவராஜ் உள்ளிட்ட 21 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. மகாசபையை நிறைவு செய்து சிஐ டியு மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ் உரை யாற்றினார்.

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் அரசாணை வெளியீடு

திருப்பூர், செப்.13-  திருப்பூர் அருகே நஞ்சராயன் குளத்தை தமிழகத்தின் 17ஆவது பறவைகள் சரணால யமாக தமிழக அரசு அறிவித்த அடிப்படை யில் அதற்கான அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. திருப்பூரை அடுத்த சர்கார் பெரியபாளை யம் அருகே உள்ள நஞ்சராயன் குளத்திற்கு இந்திய இமயமலை மற்றும் ஐரோப்பிய நாடு களிலிருந்து 116 வகையான பறவையினங் கள் வந்து தங்கி செல்கின்றன. இக்குளத்தை இயற்கைச் சூழல் மாறாமல் தூர்வாரி, புனர மைத்து பறவைகள் சரணாலயம் அமைத்து அதில் பறவைகளின் புகைப்படங்கள் தமிழ்,  ஆங்கில, அறிவியல் பெயர்களோடு, பறவை யின் வாழ்வியல் குறித்த தகவல்கள் இடம் பெற வைத்தால் கல்வி பயிலும் மாணவர்க ளுக்கு உதவியாக இருக்கும் என சமூக ஆர்வ லர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், வன  உயிரின காப்பாளர்கள் தொடர்ந்து அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்குத்  தொகுதி எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல் சட்டபேரவை யில் முதன் முதலில் கோரிக்கை வைத்தார். எனினும் அப்போதைய அதிமுக அரசு அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இருக்கும் நிலையில் அதன் அரு கிலேயே மற்றொரு பறவைகள் சரணாலயம் அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது. அதே சமயம் பல்வேறு சுற்றுப்புறச் சூழல்,   சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பைச் சேர்ந்தோர் இந்த கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.  இந்நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பறவைகள் சரணாலயம் அமைத்தி டும் கோரிக்கையை ஏற்று, நஞ்சராயன் குளத்தை தமிழகத்தின் 17ஆவது பாதுகாக் கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அரசு  அறிவித்தது. முதற்கட்ட பணிகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்து சட்டபேரவை யில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி திங்களன்று வனத்துறை சார்பில் அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை  ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள், பறவைகள் காப்பாளர்கள் மற் றும் திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக க.செல் வராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சலை தடுக்க 1032 பணியாளர்கள்: ஈரோடு ஆட்சியர்

ஈரோடு, செப்.12- டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்டம் முழுவதும் 1032 பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணணுண்னி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்னி தலைமையில் டெங்கு  காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கி ணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இக்காலத்தில் காய்ச்சல் மற்றும் டெங்குநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகை யில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநக ராட்சி, அங்கன்வாடி மையம், மகளிர் திட்டம், மாவட்ட கல்வி  அலுவலகம், கல்லூரி கல்வி இயக்ககம் உள்ளிட்ட துறை யினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகளை பொருத்தவரை மொத்தமாக 3,09,641 வீடு கள் உள்ளன.  கொசு புழு ஒழிப்பு பணியாளர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் கொசு புழு ஒழிப்பு பணி செய்யும் பட்சத்தில்  6 நாட்களில் 300 வீடுகள் கொசு உருவாகாத சூழ்நிலை  உண்டாகும். மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில்  1032  கொசுப்புழு ஒழிப்புபணியாளர் நியமிக்கப்பட வேண்டும்.   ஆனால் தற்சமயம்245 கொசு புழு ஒழிப்புபணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, போதுமான தடுப்பு  நடவடிக்கை எடுக்க டிசம்பர் - 2022 வரை மேலும் 787 கொசுப் புழு ஒழிப்பு களப்பணியாளர்களை நியமிக்க வேண்டும். காய்ச்சல் கண்ட மாணவ, மாணவியர்களின் விவரத்தை பதிவு செய்து அப்பகுதிக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் மற் றும் கிராம சுகாதார செவிலியரிடம் தினமும் தெரிவிக்க வேண் டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ள  மாணவ, மாணவியரின் விபரம் சேகரித்து, காய்ச்சல் இருப் பின் சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வை யாளரிடம் தெரிவிக்க வேண்டும். கல்லூரிகளில் சுகாதார தூது வர் நியமித்து, அவர் மூலம் அனைவருக்கும் சுகாதார கல்வி  வழங்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) சோமசுந்தரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா  உள்ளிட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனுநீதி முகாம்

ஈரோடு, செப்.13- ஈரோடு மாவட்டம், தாள வாடி வட்டம், பையண்ண புரம் கிராமத்திற்குட்பட்ட மஜரா சிமிட்டஹள்ளி, ரங்க சாமி கோவில் வளாக சமுதா யக்கூடத்தில் புதனன்று  (இன்று) மனுநீதி நாள்  முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி தலை மையில் நடைபெறும் இம் முகாமில் அனைத்துதுறை அலுவலர்களும், உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதி களும் கலந்து கொள்கின்ற னர்.  எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
 

;