districts

img

வீடுசார் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் தேவை

திருப்பூர், ஜூலை 21 – வீடுசார் பனியன் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்  தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் தேவை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச் சியில் வலியுறுத்தப்பட்டது. சேவ் தன்னார்வ அமைப்பும், டிரான்ஸ் பார்ம் ட்ரேடு என்ற நிறுவனமும் இணைந்து இது தொடர்பாக வியாழனன்று தனியார் விடு தியில் அமைப்புசாரா தொழிலாளர் தொடர் பான கூட்டத்தை நடத்தினர். இதில் பேசிய சேவ் இயக்குநர் ஆ. அலோசியஸ், திருப்பூரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வீடுசார் பனியன் உற் பத்தி தொழில்களில் ஈடுபடுகின்றனர். அவர்க ளுக்குக் கிடைக்க வேண்டிய சட்ட சலுகைகள்  கிடைப்பதில்லை. அவர்களின் உழைப்பு, உற் பத்தியை சர்வதேச அளவில் அங்கீகரித்து ஏற் றுமதியில் அவர்களின் பங்களிப்பு உறுதி  செய்யப்பட வேண்டும். உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் அவர்களுக் குத் தனி அமைப்பை ஏற்படுத்தி அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என் றார். அதேபோல் ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசு கையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்களுக்கு முறையான வழிகாட்டுதல் கொடுப்பதன் மூலம் அவர்களின் உற்பத்தி பொருட்களை, ஆன்லைன் ஊடக விற் பனை மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்  என்றார்.

அகில உலக தொழிலாளர் சம்மேளன மூத்த ஆலோசகர் பிர்லா பாரதி பேசுகை யில், உலகளாவிய உற்பத்தி சந்தையில்,  வீடுசார் தொழிலாளர் பங்கு மிக முக்கியமா னது. அவர்களின் உரிமைகளைப் பெறுவதற் கான எல்லா சாத்தியக்கூறுகளையும் உரு வாக்கித் தர வேண்டும் என்று கூறினார். அதே போல் வீடுசார் தொழிலாளர்கள் அங்கீகரிக் கப்பட்டு அவர்களுக்கான உரிமைகளைப் பெற வேண்டிய முயற்சிகள் குறித்து ட்ரான்ஸ்  பார்ம் டிரேடு மேலாளர் கிராதிகா கூறினார். இந்நிகழ்வில் வீடுசார் தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.  அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய் யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு தர வேண்டும், ஓய்வு காலத் தில் மாதம் ரூ.5ஆயிரம் ஓய்வூதியம் வழங்க  வேண்டும், இஎஸ்ஐக்கு இணையான சலுகை களை அமைப்புசாரா தொழிலாளர்களும் பெற வழிவகை செய்ய வேண்டும், இறப் பிற்கான இழப்பீடு ரூ.5 லட்சம் வழங்க வேண் டும், வீடுசார் தொழில் புரிவோர் பற்றி தொழி லாளர் நல வாரியத்தில் தனித் தொகுப்பு உரு வாக்க வேண்டும். உள்ளூர் கமிட்டி செயல்பா டுகளை மாவட்டரீதியாக வரையறை செய்து  பாலியல் துன்புறுத்தல் புகார்களை உடனடி யாக விசாரிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. இந்நிகழ்வில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

உள்ளக புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி எச்சரிக்கை

பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மகளிர்  ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி கூறி னார். இதில் அமைப்புசாராத் தொழிலாளர்க ளின் வேலைவாய்ப்பு பங்களிப்பின் மதிப் பீட்டு ஆய்வறிக்கை புத்தகத்தை மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி வெளி யிட்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், வீட்டு வேலைகளில் பணிபுரியும் பெண்கள்  அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்க ளின் நலன் கருதி அரசு இலவச பேருந்து  பயண வசதி, உயர் கல்விக்கான புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை வழங்குவது ஆகிய திட்டங்களை செயல்ப டுத்துகிறது. இதன் மூலம் பெண்கள் சுய அதி காரம் பெறலாம். பாலின சமத்துவம் அடைய போதிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனடியாக உள்ளூர் புகார் கமிட்டியை அணுகலாம். பணியிடங்களில் இது போல் பிரச்சனையில் உள்ளக கமிட்டியை அணுகலாம். உள்ளக கமிட்டி அமைப்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். தவறும் நிறுவனங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் என்.ரஞ்சிதா தேவி, அரசு நலத்திட்டங்கள் குறித்தும், அதை  எவ்வாறு பெறுவது என்றும் எடுத்துரைத் தார். முன்னதாக சேவ் அமைப்பின் இயக்கு நர் ஆ.அலோசியஸ் வரவேற்றார். திருப்பூர்  ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி, டீமா சங்கத் தலைவர்  எம்.பி.முத்துரத்தினம், அகில உலக தொழி லாளர் சம்மேளன மூத்த ஆலோசகர் பிர்லா பாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர். ட்ரான்ஸ் பார்ம் டிரேடு மூத்த ஆலோசகர் லட் சுமி பாட்டியா ஒருங்கிணைத்தார். அந்த அமைப்பின் தலைவர் ராகேஷ் சுப்கார் நன்றி  கூறினார்.