districts

img

நகராட்சி துவக்கப்பள்ளிக்கு கணினி திமுக கவுன்சிலர் வழங்கினார்

தாராபுரம், செப்.6- தாராபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி யில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் திமுக கவுன்சிலர்  ஹைடெக் அன்பழகன் கணினியை நன்கொடையாக அளித் தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மேற்கு பலிஜி வார் நகராட்சி தொடக்க பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு  சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் ஆசிரி யர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித் தனர். மேலும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியின் போது அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணி யாற்றிய பானுமதி, முத்துச்சாமி ஆசிரியர்களை போற்றும்  விதமாக அவர்களது மகனும் 3 வார்டு திமுக கவுன்சிலருமான  ஹைடெக் அன்பழகன் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு 30  ஆயிரம் மதிப்புள்ள கணினியை இலவசமாக வழங்கினார். மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பேசுகையில் ஆசிரியர்களை மதித்து அவர்கள் சொல்லி கொடுப்பதை புரிந்து படித்தால் நாம் உயர் படிப்புகள் படித்து  உயர் பதவிகளை அடைய முடியும். மேலும் ஒரு குழந்தையை  மனிதராக்குவதில் தாய், தந்தைக்கு எப்படி பங்கு இருக்கி றதோ, அதை விட பெரிய பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு.   மாதா, பிதா, குரு தெய்வம் என அம்மா அப்பாவிற்கு  அடுத்த  படியாக  ஆசிரியர்களை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர் என பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாண விகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.