districts

img

பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்க கோரிக்கை

திருப்பூர், செப். 4 - திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பொது விநி யோக திட்டத்தை தனித்துறையாக மாற்ற வேண்டும் என்று  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் கோரி யுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சனிக்கிழமை சிஐடியு மாவட்ட குழு  அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல்  வாக்குறுதியில் கூறியபடி பொது விநியோகத் திட்டத்தை  தனித்துறையாக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு அனைத்து பணியாளர்ளுக்கும் 20 சதவிகித  போனஸ் வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப் பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்கு களை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும். நியாய விலை கடைகளுக்கு தரமான அரிசி வருவதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி  மாபெரும் ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.மகேந்திரன், பொருளாளர் பி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;