திருப்பூர், பிப்.21 - அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் திருப்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தப் பட்டு, 2024 பிப்ரவரிக்குள் மக்கள் பயன்பாட் டிற்கு வரும் என தெரிவித்திருந்த நிலையில், ஓர் ஆண்டு கடந்தும் இன்னும் பணிகள் முழு மையாக முடிக்கப்படாமல் உள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத் தும் பணிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு பிரத மர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்படி, 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது என அறிவித்திருந்தனர். இதில், பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்ப டுத்தப்படும். குறிப்பாக, ரயில் நிலையங்க ளில் லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடை மேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, நுழைவாயில் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், வாகன பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா உள் ளிட்டவை அமைக்கப்படும். முதல்கட்டமாக, ரூ.381 கோடியில் தமிழ் நாட்டில் செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ் சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப் பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென் காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள், மேம்படுத்தப்பட்டு, அடுத்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்திருந்தார். அந்த வகையில் திருப்பூர் ரயில் நிலையம் 22 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணி கள் தொடங்கியது. ஆனால் இன்னும் பணி கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. விரிவுபடுத்தப்பட்ட டூ வீலர், கார் பார்க் கிங், பயணிகள் ஓய்வறை, கேன்டீன், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட ரயில்கள் அடுத்தடுத்து வரும் போதும், பயணிகள் உட னடியாக வெளியேறிச் செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் அமைக் கும் பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகி றது. ரயில் நிலையம் உள்ளே அமைக்கப்பட் டுள்ள எஸ்கலேட்டர்களும் முழுமையாக வேலை செய்வதில்லை. இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகை யில், மிகப்பெரிய தொழில் நகரம் திருப்பூர், இங்குள்ள ரயில் நிலையத்திற்கு வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்க ணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தி யாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் வந்து செல்லக்கூடிய ரயில் நிலை யமாக உள்ள திருப்பூர் ரயில் நிலையம் மேம்ப டுத்தப்படும் என அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச் சியாக இருந்தது. அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் முழு மையாக முடிக்கப்படாமல் உள்ளது. அரு காமை மாவட்டமான கோவையில் பணிபுரி யும் தொழிலாளர்கள் வாகனங்களை நிறுத்தி செல்ல கூடிய பார்க்கிங் வசதி போதுமான தாக இல்லை. ஒரு பிளாட்பாமில் இருந்து அடுத்த பிளாட்பாமிற்கு செல்ல அமைக்கப் பட்ட எஸ்கலேட்டர்கள் வேலை செய்வ தில்லை. தொடர் விடுமுறை காலங்களில் ரயில் நிலையத்திற்குள் நிற்கக்கூட இடம் இருப்பதில்லை. அந்த அளவிற்கு கூட்டத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறக்கூட இடம் இருப்பதில்லை. எனவே ரயில் நிலைய பணிகளை விரைவில் முடித்தால் நன்றாக இருக்கும் என்றனர். சரக்கு ரயில்கள் நிறுக்கும் கூட்செட் தொழி லாளர்கள் கூறுகையில், பல்வேறு மாநிலங்க ளில் இருந்து வரக்கூடிய சரக்கு ரயில்கள், திருப்பூரில் நிற்க கூடிய கூட்செட் நடை மேடை அருகில் லாரி நிறுத்த முடியவில்லை. கடைசி நான்கு பெட்டிகளுக்கு சரக்குகளை சுமந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் சரக்கு ஏற்றி இறக்கும் இடம் குண்டும் குழி யுமாக உள்ளது. இங்கு பெண்கள் 40 பேர் உள்பட 200 பேர் பணியாற்றுகிறார்கள். தமிழ் நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன் றான திருப்பூர் இந்த நிலையில் உள்ளது என் றால், உள் மாவட்ட நிலையங்கள் எவ்வாறு இருக்கும். உட்கட்டமைப்புகளை மேம்ப டுத்த வேண்டும் என்றனர்.