districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பாஜக பதாகைகளை அகற்ற தபெதிக கோரிக்கை

திருப்பூர், செப். 21 - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயண விளம்பர பதாதைகள் காங்கயம் பகுதிகளில் கோவை, திருச்சி  நெடுஞ்சாலைகளில் போக்கு வரத்துக்கு இடையூறாக வைக் கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புப்படி இவற்றை அகற்றி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திரா விட கழகம் வலியுறுத்தியுள்ளது.  ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில்  அரசியல் கட்சிகள் வைத்த விளம்பர பலகைகளால் விபத்து ஏற்பட்டு மூன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததையும், இது  போன்ற விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமும் மற்றும் தேசிய நெடுஞ் சாலைகளின் ஓரங்களில் எவ்வித விளம்பர பதாதைகளும் வைக்கக் கூடாது.  மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்றி, பதாகைகள் வைத்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  மாவட்டத் தலைவர்  சண்.முத்துக்குமார் தலைமையில் மனு  கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரமேசுபாபு, மாவட்ட  அமைப்பாளர் அகிலன், மாநகர மண்டலச் செயலாளர் பிரேம்கு மார், மாணவர் அணி செயலாளர் அறிவரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கணவன் சந்தேகப்பட்டு துன்புறுத்தல் வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

திருப்பூர், செப். 21 – திருப்பூரில் கணவன் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டை யிட்டு வந்ததால் மனமுடைந்த மனைவி தனது வாக்கு மூலத்தை வீடியோ பதிவு செய்து மற்றவர்களுக்கு அனுப்பி விட்டு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூரை அடுத்த செட்டிபாளையம் பிரியங்கா நகர் பகு தியைச் சேர்ந்தவர் சுரேஷ் பனியன் தொழிலாளி. இவரது  மனைவி சொர்ணகலா. இருவருக்கும் கடந்த 11 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் ஆனது. கனிஷ்கா என்ற பெண்  குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் திருமணம் ஆனதில்  இருந்தே தொடர்ந்து சொர்ணகலா மீது சந்தேகப்பட்டு சண்டை செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்துள்ளனர். அப்போது சுரேஷ் வீட்டில் இருந்து  வெளியே சென்றிருக்கிறார். வீட்டில் தனியாக மனமுடைந்த  நிலையில் இருந்த சொர்ணகலா, தனது கணவர் சுரேஷ் தன்  மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததையும்,  மாமியார் உள்ளிட்ட அவர்கள் குடும்பத்தினர் துன்புறுத்திய தாகக் கூறி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கி றார். அதில் தனது மகளை தனது பெற்றோரும், தனது இரு  தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி தனது  தோழிகளுக்கும், குடும்பத்தாருக்கும் அனுப்பி வைத்திருக்கி றார். பின்னர் வீட்டிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 15 வேலம்பாளை யம் போலீசார், சொர்ணகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சொர்ணகலா வின் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி வழக்கு பதிவு  செய்து, அவரின் கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தா ரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.11 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப்.21- அவிநாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடை பெற்ற ஏலத்தில் 119 விவசாயிகள் கலந்து கொண்டு 740  மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து  இருந்தனர். சேவூர் சுற்றுவட்டார வியாபாரிகள் 9 பேர் கலந்து  கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன் றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.8,500 வரை யிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,500  வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,500  வரையிலும் பச்சைநிலக்கடலை ரூ.4,360 முதல் ரூ.5,030 வரை யிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ.11 இலட்சத்திற்கு ஏலம்  நடைபெற்றது.

தையல் மூலப்பொருட்களுக்கான  ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

உடுமலை, செப்.21- தையல் கலைஞர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட் களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி தையல்  கலைஞர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் உடுமலை  மற்றும் மடத்துக்குளம் பகுதியின் சிறப்பு பேரவை, உடுமலை  சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் தையல் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு விதிக்கபட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய  வேண்டும். கிராமப்புற தையல் கலைஞர்களுக்கு இலவச  தையல் இயந்திரம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகள் மற்றும்  அரசு துறைகளில் சீருடை உள்ளிட்ட வேலைகளை நிறுவனங் களுக்கு தராமல் உள்ளூர் பகுதி தையல் கலைஞர்களுக்கு தர  வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்தி உரிய  காலத்தில் பணப்பலன்களை தர வேண்டும். நியாய விலை கடைகளில் 16 வகையான அத்தியாவசிய பொருட்களை மாதம் முழுவதும் தர வேண்டும். சமையல் எரிவாயு, பெட் ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை குறைக்க வேண் டும். அரசு துறையில் இருக்கும் காலி பணியிடங்களை பூர்த்தி  செய்ய வேண்டும். அனைத்து வங்கிகளிலும் தையல் இயந்தி ரம் மற்றும் கடைகள் வைக்க நிபந்தனை இல்லாத கடன்களை  வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. பின்னர் உடு மலை மற்றும் மடத்துக்குளம் பகுதி தையல் தொழிலாளர் சங் கத்தின் கன்வீனராக ரத்தினசாமி தேர்வு செய்யப்பட்டார். துணை நிர்வாகிளாக ஜெகதீசன் மற்றும் செல்லம்மாள் ஆகி யோர் பேரவையில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த சிறப்பு பேரவையில் தையல் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் எஸ்.ஜெகதீசன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் எல் லம்மாள் மற்றும் தையல் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் ரத்தினசாமி உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண் டனர்.

உடுமலையில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர், செப்.21- திருமூர்த்தி நகர் தலைமை நீரேற்று நிலை யத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும் முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ள தாலும் இன்று உடுமலை நக ரில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொது மக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளும்படி  மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

சர்வர் கோளாறு - பெண்கள் ஏமாற்றம்

நாமக்கல், செப்.21- ராசிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் கலைஞர் உரிமைத் தொகை உதவி மையத்தில் சர்வர் கோளாறு காரணமாக பெண்கள் அவதிக்குள்ளாகினர். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம்  தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் அதன் காரணம் குறித்து தெரிந்து கொள்ள நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா  அலுவலகத்தில் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.  தங்களது விண்ணப்பம் குறித்து தெரிந்து கொள்ள சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் தாலுக்கா  அலுவலகத்தில் உள்ள தகவல் மையம், இ சேவை மையம்  ஆகியவற்றில் கூடினர். இதனால் சர்வர் கோளாறு ஏற்பட்டு  ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் 200க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகள்

கோவை, செப்.21- கோவை அருகே  உள்ள தடாகம் பகுதியில் 3 காட்டு  யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர்.   கோவை மாவட்டம். மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில்  கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக மாக காணப்படுகிறது.  இந்நிலையில், புதனன்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நஞ்சுண் டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.  இதனையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டன. அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அப் பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை 6 மணியளவில்  நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக  வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் செல் போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இரண்டு நாட்கள் ஆன குழந்தை சடலமாக மீட்பு

கோவை, செப்.21- கோவை அருகே பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை  சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையத்திலிருந்து கரு வலூர் செல்லும் சாலையில் கௌசிகா நதி உள்ளது. வியாழ னன்று காலையில் அந்தப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் கௌசிகா நதியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.  இதுகுறித்து, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு  கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில் பாளையம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது

ஈரோடு, செப்.21- திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில், 6 பேர் காயமடைந் தனர். கோவையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் கர்நாடக  மாநிலம், மைசூருவில் உள்ள ஒரு கோவி லுக்கு காரில் சென்றார். இதன்பின் புதனன்று  மாலை கோவைக்கு திரும்பினார். திம்பம் மலைப்பாதையின் 24 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கட்டுப் பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.  இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும்  காயம் அடைந்தனர். இதையடுத்து அவ் வழியாக வாகனங்களில் வந்தவர்கள், 6  பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு

ஈரோடு, செப்.21- 45 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்த கட்ட டத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன. சில மற்றும் வாடகை கட்டத்தில் இயங்குகின்றன. சில கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பழுதாகி உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, 6 கட்டடங் கள் முடியும் நிலையில் உள்ளன. 39 கட்டிடத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவை 15 ஆம் நிதி கமிஷன் நிதி  ஒதுக்கீட்டில் கட்டப்படுகின்றன. கடம்பூரில் 2 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. மலைப்பகுதியில் சேசன்  நகர், தாளவாடியில் துணை சுகாதார நிலையம் குடியிருப்பு டன் அமைய உள்ளது. இப்பணிகள் நிறைவடையும்போது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப துணை சுகாதார நிலையங் களும் சொந்த கட்டடத்தில் செயல்படும் என ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரி வித்துள்ளார்.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நல்லம்பள்ளி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, செப்.21- மழையால் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர மைக்க வேண்டும் என நல்லம்பள்ளி கவுன்சிலர்கள் வலியு றுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஒன்றியக்குழு துணைத்தலை வர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட் டத்தில் டெங்கு பரவலை தடுக்க கிராம ஊராட்சிகளில் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் சேதமடைந்த தார்சாலைகளை சீர மைக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் முறையாக ஒகேனக் கல் குடிநீர் வழங்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தனிநபர் வீடுகளுக்கு வழங்கப்பட்டு பழுதான குடிநீர் இணைப் புகளை சீர்செய்ய உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டடங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். உம்மியம்பட்டி அருந்ததி யர் காலனி மயானத்திற்கு செல்லும் சேதமான கான்கிரீட் சாலையை சீர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி யளிக்கப்பட்டது.

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்: போராட்ட எச்சரிக்கை

உதகை, செப்.21- குன்னூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதி யில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விரைந்து பணியை முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையெனில் போராட்டத் தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி, 26 ஆவது வார்டுக் குட்பட்ட மிஷன் ஹில் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் உடைந்து கிடந்தது. இதனால் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை யேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், பழைய கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றப்பட்டு, நடை பாதையில் குழிகள் தோண்டப்பட்டன. அதன்பிறகு அந்த பணி  பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. 2 மாதங்களை கடந்தும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கவில்லை. இதன் காரணமாக நடைபாதையில் உள்ள குழிகளால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கால்வாயை அகற்றும்போது, நடைபாதையையும் தோண்டி போட்டுவிட்டனர். தற்போது அவ்வழியாக நடந்து செல்லவே முடியவில்லை. முதியவர்கள், சிறுவர்கள் தவறி விழுந்து காயமுறுகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண் டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்ற னர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்'

நாமக்கல், செப்.21- மேற்பார்வையாளரை கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவ மனை வளாகத்தில் தூய்மைப் பணியாளர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 150  தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் ஊதியம் வழங்கி வருகிறது. இந்நிலையில்,  தூய்மைப் பணியாளர் ஒருவரை மேற்பார் வையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே, அந்த மேற்பார்வையாளரை கைது  செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் அரசு மருத்துவ மனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு மற்றும் வட்டாட்சியர் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். எனினும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் புத னன்று இரவு வரை நீடித்தது. இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள் குட்டிகளுடன் வந்த கரடி

உதகை, செப்.21- கோத்தகிரியில் இரவு நேரத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடிகள் சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப் படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.  இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதி யில் இரவு நேரங்களில் சாலையில் இரண்டு குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை  வாகனத்தில் சென்றவர்கள் செல்போ னில் வீடியோ எடுத்துள்ளனர். பொதுமக்களை கரடிகள் தாக்கும் முன் வனத்துறையினர் சாலையில் சர்வசாதரண மாக உலவு கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில்  விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு கருத்தரங்கம்

ஈரோடு, செப்.21- பொது சிவில் சட்டம், நீட் தேர்வு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்ப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெறுகிறது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் ஈரோட்டில் வரும் ஞாயிறன்று பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ் தலைமை வகிக்கிறார். “பொது சிவில் சட்டமா! பிராமணிய சிவில் சட்டமா” என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் அருணன், “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற  தலைப்பில் திமுக செய்தி தொடர்பாளர் ஆண்டாள் பிரய தர்சினி, “நீட் தேர்வு என்னும் வணிக சூதாட்டம்” என்ற தலைப் பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கருத்து ரையாற்றுகின்றனர். நிறைவாக, மாவட்ட அமைப்பாளர் சி. முருகேசன் நன்றி கூறுகிறார்.

ரூ.8.53 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.21- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல பட்டு வரும் ஏல அங்காடிக்கு புதனன்று 1,735 கிலோ பட் டுக்கூடுகள் கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு கிலோ  பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.602க்கும், குறைந்தபட்ச மாக ரூ.228க்கும், சராசரி யாக ரூ.491.93க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 53 ஆயிரத்து 500க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக ஏல அதி காரிகள் தெரிவித்தனர்.