districts

img

நாள்தோறும் ஆபத்தை சந்திக்கும் நிலை: சாலை வசதி கேட்டு மனு

தருமபுரி, ஜூன் 27- பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொட்டாய் முதல் வாரக் கொல்லை வழியாக மலையூருக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தரும புரி மாவட்ட வன அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக் குட்பட்ட மேட்டுக்கொட்டாய் கிரா மம் முதல் வாரக்கொல்லை வழி யாக மலையூர் வரை குண்டும், குழி யுமான நிலையில் மண்சாலை உள் ளது. சுமார் 5.5 கி.மீ. தூரம் கொண்ட மலைப்பாங்கான இச்சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற் றும் கல்லூரி மாணவ, மாணவிக ளும், மருத்துவமனை செல்பவர்க ளும், விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்பவர்களும், தினசரி வாரச்சந்தைக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்களும் சிரமப் பட்டு வருகின்றனர். கற்கள் நிறைந்த மண்சாலையில் ஐம்பள் ளம் உள்ளிட்ட இரண்டு இடங்க ளில் 100 டன் எடைக்குமேல் உள்ள  பாறைகள் சரிந்து விழும் அபாய கரமான நிலை உள்ளது. மேற்கண்ட சாலை சரியில்லாததால் மலை யூரிலிருந்து வாரக்கொல்லை வழி யாக பிற ஊர்களுக்கு போக முடியா மல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகி றது. இச்சாலையை தார்ச்சாலை யாக மாற்றுவதன் மூலம், பிக்கிலி  ஊராட்சி, சக்கில்நத்தம் வழியாக பாலக்கோடு மற்றும் தருமபுரி பகு திகளுக்கு சாலை இணைப்பு கிடைக்கும். இதனால் இப்பகுதி மக் களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, மேட்டுக்கொட்டாய் முதல்  வாரக்கொல்லை வழியாக மலை யூர் வரை விரைவாக தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட வன  அலுவலர் ராஜாங்கத்திடம் மனு அளிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்ன சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க  பகுதிக்குழு தலைவர் சின்னராசு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காமராஜ், சின்னசாமி, பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.