districts

img

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆபத்து

சேலம், ஜூன் 19- மாநில நெடுஞ்சாலை ஆணை யத்தால் சாலை பணியாளர்கள் பணியிடம் ஒழிக்கப்படும் ஆபத்து  உள்ளதாக குற்றம்சாட்டி சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத் தின் சேலம், நாமக்கல், கிருஷ்ண கிரி மாவட்டங்கள் பங்கேற்ற மண் டல அளவில் ஆர்ப்பாட்டம் சேலம் ரெட்டியூரில் நடைபெற்றது. நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற தண்டோரா முழக்க ஆர்ப்பாட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப் பதன் மூலம் 3,500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர், சாலை ஆய் வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்ப டும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி தனியார் வசூ லிக்க அனுமதிக்க கூடாது, நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கையிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக ளில் வேலை வழங்கிட வேண்டும்,  நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பில் மீண்டும் சீரமைப்பு செய்து நிரந்தர பணியிடங்களை ஒழிக்க கூடாது, ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதில் சங்கத் தின் பொதுச் செயலாளர் செந்தில் நாதன், மாநிலத் துணை செயலாளர் மகாதேவன், துணைத்தலைவர் சிங்கராயன், அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  கோவை இதேபோன்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப ணியாளர் சங்கம் சார்பில் கோவை  திருச்சி சாலையில் உள்ள நெடுஞ் சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று தண்டோரா முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி,  கோபி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்ற னர். கோட்டத் தலைவர்கள் பி.முரு கேசன், எம்.ராஜேந்திரன், எம்.வெற் றிவேல், என்.முருகவேல் தலைமை  வகித்தனர்.  இதில், கோட்டச் செயலாளர் கள் ஆர்‌.கருப்புசாமி, டி.முருகன், கே. இளங்கோவன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி, சாலை பணி யாளர் சங்க மாநிலத் தலைவர் மா. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், மாவட்ட  துணைத் தலைவர் கே.ரங்கநாதன் நன்றி கூறினார்.